சட்டம் படீங்க, சம்பாத்தியத்தை அள்ளுங்க..! திறமை இருந்தா நீங்கதான் பெரிய ஆளு..!

சட்டம் படீங்க, சம்பாத்தியத்தை அள்ளுங்க..! திறமை இருந்தா நீங்கதான் பெரிய ஆளு..!
X

சட்டம். (மாதிரி படம்)

சட்டம் படித்து திறமையாக வாதாடும் ஆற்றல் இருந்துவிட்டால் அசைக்கமுடியாத சட்ட நிபுணராக வளரும் வாய்ப்புகள் உள்ளன.

ஹை கைஸ், நாம் தொடர்ந்து பல்வேறு பட்டப்படிப்புகளை பார்த்து வருகிறோம். அவ்வாறு கூறப்பட்ட பல்வேறு படிப்புகளில் உங்களுக்கு பொருத்தமான படிப்பை தேர்வு செய்து படிப்பதற்கு இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டுகிறது. அந்த வகையில் இன்று சட்டம் சம்பந்தமான படிப்புகளை பார்க்கவுள்ளோம்.

7. ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள் :

கலைப்பிரிவு மாணவர்களுக்கு, பி.ஏ. எல்.எல்.பி. என்பது சிறந்த ஒருங்கிணைந்த சட்டப் படிப்பாக அமையும். பி.ஏ. எல்.எல்.பி. ஒருங்கிணைந்த படிப்பின் காலம் 5 ஆண்டுகளாகும்.

ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள், அதற்கான பணிகள், தொழில் வாய்ப்புகள் போன்றவற்றைப் பற்றி நாம் பார்க்கவுள்ளோம். அடிப்படையில், ஒரு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு இரண்டு பட்டங்களை ஒருங்கிணைக்கிறது. அதாவது ஒரு UG நிலை பட்டப்படிப்பு மற்றும் LL.B. படிப்பு. கலைப் பிரிவு மாணவர்களுக்கான சில ஒருங்கிணைந்த எல்.எல்.பி. பட்டங்கள் :

  • B.A.,எல்எல்பி.
  • BBA LL.B.

பாடநெறிமுறைகளின்படி 5 ஆண்டு படிப்பாகும். படிப்பு முடிப்பவர், ஒரே நேரத்தில் ஒரு இளங்கலை பட்டம் மற்றும் சட்டப் பட்டம் பெறுவார். ஒருங்கிணைந்த எல்எல்பி முடித்த பிறகு பார் கவுன்சிலில் பதிவுசெய்து சட்டப்பணிகளை தொடங்கலாம்.

சட்ட பாடத்திட்டத்தில் உள்ள முக்கியமான பாடங்கள் :

  • அரசியலமைப்பு சட்டங்கள்
  • சொத்து சட்டங்கள்
  • வங்கிச் சட்டங்கள்
  • சுற்றுச்சூழல் சட்டங்கள்
  • நிறுவன சட்டங்கள்
  • நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள்
  • குடும்பச் சட்டங்கள்
  • தொழிலாளர் மற்றும் தொழில்துறை சட்டங்கள்
  • மனித உரிமைகள் சட்டங்கள்
  • நிர்வாக சட்டங்கள்
  • பொது சர்வதேச சட்டங்கள்

ஒருங்கிணைந்த சட்ட படிப்பின் வேலைகள், நோக்கம் மற்றும் சம்பளம் :

அரசு வேலை :

வழக்கறிஞர்களுக்கு அரசு, தனியார் மற்றும் சுயவேலை வாய்ப்புகள் உள்ளன. முதலில் அரசு வேலை வாய்ப்பு பற்றி தெரிந்துகொள்வோம். திறமையான வழக்கறிஞர்கள் பொதுத்துறை நிறுவனங்கள், முனிசிபல் கார்ப்பரேஷன்கள், அரசு துறைகள் (போக்குவரத்து, நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் பல) போன்ற துறைகளில் பணியமர்த்தப்படுகிறார்கள். சட்டப் பட்டதாரிகள் UPSC தேர்வு, சிவில் சர்வீஸ் பதவி பெறவும் தகுதியுடையவர்கள். அவர்கள் மாநில PSC தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். Class 1 அல்லது 2 பதவிகளில் சேரவும் வாய்ப்புகள் உள்ளன.

தனியார் துறை வேலை :

இப்போது தனியார் வேலை வாய்ப்புகளைப் பற்றி பார்க்கலாம். வழக்கறிஞர்கள் பொதுவாக சட்ட நிறுவனங்கள், consultancies, MNCகள், கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிக்கு சேரலாம். வழக்கறிஞர்கள் சுயமாக,சுதந்திரமாகவும் சட்டப்பணிகளை தொடங்கலாம். சொந்தமாக சட்ட நிறுவனம் தொடங்கி சட்ட ஆலோசனைகளை பல நிறுவனங்களுக்கு வழங்கலாம்.

சம்பளம் :

ஆரம்ப சம்பளம் - வேலை வகை (அரசு அல்லது தனியார்), வேலை இடம் போன்ற காரணிகளைப் பொறுத்தது. அரசுப் பணி என்று வரும்போது ​​பணியாளரின் திறமையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். சராசரியாக, தொடக்கச் சம்பளம் (தனியார்) மாதத்திற்கு ரூ.35ஆயிரம் முதல் ரூ.65ஆயிரம் வரை இருக்கலாம்.

திறமை முக்கியம் :

இந்தத் தொழிலைப் பொறுத்தவரை, அனுபவம் மிகவும் முக்கியம். சட்டப்படிப்பை முடித்த கல்லூரியைப்பொறுத்து, வழங்கப்படும் பதவி தகுதி பெறுகிறது. உதாரணமாக, ஆரம்பத்தில், நீங்கள் மூத்த, அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரின் கீழ் பணிபுரியலாம். அந்த கட்டத்தில், உங்கள் சம்பளம் குறைவாக இருக்கலாம். ஆனால் அந்த அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரிடம் தொழில் தந்திரங்கள் மற்றும் வழக்காடும் திறமையை சட்ட நுணுக்கங்களுடன் கற்று தனியே தொழில் செய்யும்போது அதற்கான மதிப்பு கூடும். அப்போது கேட்ட சம்பளம் கிடைக்கும். லட்சங்களில் சம்பாதிக்கும் பல வழக்கறிஞர்கள் உள்ளனர்.

அதே நேரத்தில், புகழ்பெற்ற சட்ட கல்லூரிகளில் பட்டம் பெறுபவர்களை அதிக ஊதியம் கொடுத்து பெரிய நிறுவனங்கள் பணியமர்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். (இன்னும் பேசுவோம்)

BCA படீங்க..! பெரிய சம்பளம் வாங்குங்க..! திறமை இருந்தால் தினமும் திருவிழாவே..!https://www.instanews.city/education/learn-bca-and-earn-a-pocket-full-of-money-1133979

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!