தனித்துவமா படீங்க..! தனிக்காட்டுராஜாவா வேலை வாங்குங்க..!

தனித்துவமா படீங்க..! தனிக்காட்டுராஜாவா வேலை வாங்குங்க..!
X
எல்லாரும் படிக்கிறதை படிக்காம ஸ்பெஷலா படிச்சா வேலை கிடைக்கிறதும் ஈசி தானேங்க. என்ன படிக்கிறதுன்னு முடிவு பண்ணுங்க.

காலத்துக்கு ஏற்றவாறு சில படிப்புகளும் உருவாக்கப்படுகின்றன. அதற்கு வேலைவாய்ப்புகளும் குவிந்துகிடக்கின்றன. அதனால் என்ன படிக்கறோம் என்பது முக்கியமல்ல. எப்படி படிக்கிறோம் என்பதும் முக்கியம். யாரும் அதிகம் படிக்காத பொறியியல் படிப்பை தேர்ந்து எடுங்க..படீங்க..! தனித்துவமா இருக்கணும்னு விருப்பப் படறவங்களுக்கு நல்ல சாய்ஸ் இந்த படிப்புகள்.

சுற்றுச்சூழல் பொறியியல் :(Environment Engineering)

உலகை மறுவரையறை செய்ய விரும்பும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு சுற்றுச்சூழல் பொறியியல் சிறந்த படிப்பு. அறிவியல் மற்றும் பொறியியலின் கொள்கைகளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றிய விரிவான பார்வையை இந்தப் பாடநெறி வழங்குகிறது. எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் என்பது மாசு, கழிவு மேலாண்மை, வனவிலங்கு பாதுகாப்பு, நீர் தர மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மற்றும் பல போன்ற சுற்றுச்சூழல் பிரச்சனைகளின் முக்கிய பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பரந்த பகுதி ஆகும். சுற்றுச்சூழல் பொறியாளர் ஒரு நல்ல தொழில் நோக்கம் கொண்ட ஒரு பொறுப்பான தொழில். இந்தியாவில், அரசு நிறுவனங்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், தொழில்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுரங்கங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவை சுற்றுச்சூழல் பொறியாளர்களை திறம்பட பயன்படுத்துகின்றன.

கல்லூரி : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை.

பெட்ரோ கெமிக்கல் பொறியியல் :(Petrochemical Engineering)

பெட்ரோ கெமிக்கல் பொறியாளர்கள், பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி செயல்பாடுகள், அதற்கான ஆய்வு, தோண்டுதல் மற்றும் மேம்பாடு வரை அனைத்துயும் திட்டமிட்டு, மேற்பார்வை செய்வது அவர்கள் பணியாகும். வளைகுடா நாடுகள் மற்றும் பெட்ரோலியம் எடுக்கும் நாடுகளில் பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர்களுக்கான தேவை தாராளமாக உள்ளது.

B.Tech Petrochemical Engineering:

பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் பி.டெக் முடித்த பிறகு, ஒருவர் ஆராய்ச்சி பொறியியலாளராகவோ அல்லது ஆய்வாளராகவோ பணியாற்றலாம். பி.டெக் பெட்ரோகெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்த பிறகு அவர்களுக்கான வேலைகள்:

  • பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர் (Petrochemical Engineer)
  • பராமரிப்பு பொறியாளர் (Maintenance Engineer)
  • துளையிடும் பொறியாளர் (Drilling Engineer)
  • இரசாயண ஆய்வாளர் (Chemical Analyst)
  • நீர்த்தேக்க பராமரிப்பு (Reservoir Maintenance)
  • திட்டப் பொறியாளர் (Project Engineer)
  • மென்பொருள் ஆய்வாளர் (Software Analyst) போன்ற வேலைகளுக்குச் செல்லலாம். ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.8 லட்சம் வரை சம்பளம் பெறலாம். அப்புறம் என்னங்க யோசனை? பிளான் பண்ணி படீங்க..பிளான் பண்ணி வேலை வாங்குங்க.

கல்லூரி : University College of Engineering, Bharathidasan Institute of Technology Campus Anna University, திருச்சிராப்பள்ளி

(இன்னும் வரும்)

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil