விஞ்ஞானி ஆகணுமா? இயற்பியல் படிங்க..ஈஸியா வேலை வாங்குங்க..!
இயற்பியல் படிக்கிறது ஈசிதான் கைஸ். கொஞ்சம் முயற்சியும் கொஞ்சம் படிப்பதும் வேணும்.அவ்ளோதான். ஈஸியா பாஸாகலாம். உங்கள் சுய முயற்சி இருந்தால் BOSS -ம் ஆகலாம்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன் அறிவியலின் துணையின்றி தன் பணிகளைச் சிறப்பாகச் செய்துவிட முடியாது. அத்தகைய அறிவியல் துறையில் இயற்பியல் என்பது தனிப்பெரும் துறை.
இயற்பியல் இளநிலை அறிவியல்; (B.Sc-Physics) எனும் பாடப்பிரிவு மிகவும் குறைந்த கல்விக் கட்டணத்தில் அனுபவமிக்க பேராசிரியர்களைக் கொண்டு சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது.
பி.எஸ்சி இயற்பியல் (B.Sc-Physics) என்பது மூன்றாண்டு பட்டப் படிப்பாகும். பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப் பிரிவுகளைப் படித்தவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். இளநிலை இயற்பியல் படித்தால் மட்டுமே முதுகலை மருத்துவ இயற்பியல் துறையைத் தேர்ந்தெடுக்க முடியும்.
இயற்பியல் என்பது ஒரு பொருளின் இயக்கம் மற்றும் அதனோடு தொடர்புடைய கொள்கைகளான ஆற்றல், விசை முதலியவற்றைப் படிக்கும் ஓர் இயல் இயற்பியலாகும். இயற்கை நிகழ்வுகளை தெளிவாகவும், உள்ளது உள்ளபடியாகவும் கண்டறிய இயற்பியலில் எடுக்கப்படும் முயற்சிகள் எண்ணில் அடங்காத எல்லைகளை எட்டியுள்ளது. அணுவினும் மிகச்சிறிய நுண்துகளைப் பற்றியும் பேரண்டத்தின் தொலைவில் உள்ள விண்மீன்களின் உருவாக்கம் குறித்தும் இயற்பியல் விவரிக்கிறது.
இயற்பியலில் ஏற்படும் முன்னேற்றங்கள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கின்றன. எடுத்துக்காட்டாக மின்காந்தவியல் மற்றும் அணுக்கருவியல் குறித்த கண்டுப்பிடிப்புகள் மனித வாழ்வில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இம்மாற்றங்களால் விளைந்தவையே தொலைக்காட்சி, கணினி, வீட்டில் உபயோகப்படுத்தும் மின்சாதனங்கள் ஆகியன. அணுகுண்டு போன்றவற்றை பற்றித் தெரிந்து கொள்ள இயற்பியல் பாடப்பிரிவு உதவுகிறது.
வேலைவாய்ப்புகள் :
- பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றலாம்.
- விஞ்ஞானம் சம்பந்தமான அனைத்துத் துறைகளிலும் பணியாற்றலாம். [ISRO, NASA, DRDO, JRF, NANO]
- அணுக்கரு, அனல்மின், நீர்மின் போன்ற அனைத்து மின்னணு நிலையங்கள் மற்றும் சர்க்கரைத் தொழிற்சாலை, காற்றாலைகள் போன்ற துறைகளில் பணியாற்ற முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
- மருத்துவ இயற்பியல் படித்தால் மருத்துவம் சார்ந்த கதிரியக்க கருவிகளை இயக்கும் பணிகளில் பணியாற்றலாம். [Radiologist]
- இயந்திர மனிதனைப்(ரோபோ) பயிற்றுவிக்கும் பணியில் சேரலாம். [Robotics Trainer]
- மின்னணு சாதனங்களை பொருத்தும் நிபுணராகப் பணியாற்றலாம். [Electronic Assembler]
- அரசுத் தேர்வான UPSC, TNPSC, TRB, RRB, IBPS போன்ற தேர்வுகளை எழுதலாம்.
துறையின் சிறப்பம்சங்கள் :
• பாடத்திட்டங்கள் சார்ந்த கருத்தரங்கம், பயிலரங்கம் பயிற்சிப் பட்டறை ஆகியவை துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு ஆண்டுதோறும் சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது.
• நவீனமயமாக்கப்பட்ட ஆய்வுக்கூடங்களில் மின்னணுவியல் (Electronics) மற்றும் பொதுவான சோதனைகளுக்கு உயர் தர உபகரணங்களைக் கொண்டு செய்முறை பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
• வளாக நேர்காணலில் வெற்றிபெற மாணவர்களுக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளும் கல்லூரியில் கற்றுத்தரப்படுகிறது.
• இத்துறையில் பயின்ற மாணவர்கள், கல்லூரியில் நடைபெறும் வளாக நேர்காணலில் தேர்ச்சிப் பெற்று பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணி வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu