பி.எஸ்சி.,(B.Sc.)கார்டியாக் டெக்னாலஜி படிங்க..! நல்ல பதவியை பிடிங்க..!

பி.எஸ்சி.,(B.Sc.)கார்டியாக் டெக்னாலஜி படிங்க..! நல்ல பதவியை பிடிங்க..!
X

கார்டியாக் பட்ட மாணவி (மாதிரி படம்)

பி.எஸ்சி.,(B.Sc.)கார்டியாக் டெக்னாலஜி படித்தால் இதயம் சார்ந்த மருத்துவத்துறைகளில் நல்ல வேலை வாய்ப்பை பெறலாம்.

பி.எஸ்.சி. கார்டியாக் டெக்னாலஜி என்பது மூன்று முதல் நான்கு வருட இளங்கலைப் பட்டப்படிப்பாகும். இதய நோய்களுக்கான சிகிச்சை மற்றும் நோயை கண்டறிதலில் மருத்துவர்களுக்கு உதவுகிறார்கள். பாடநெறி முழுவதும் மாணவர்கள் இருதய அமைப்பின் தொழில் நுட்ப அம்சங்கள், அவசரகால நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்கிறார்கள். பன்னிரெண்டாம் வகுப்பில் தாவரவியல்,விலங்கியல், இயற்பியல்,வேதியியல் ஆகிய பாடப்பிரிவில் படித்திருந்தாலும் கூட இந்த படிப்பில் சேரலாம்.

அசந்தால் ஆளைக் கொள்ளும் இதய நோயைக் கண்டறியும் நுட்பங்களைக் கண்டறிந்து அதை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து நோயாளியின் இதயத்தின் திறனை தெளிவாக விளக்குபவர்களே இந்த இதய தொழில் நுட்பவியலாளர்கள் (Cardiac Technician). இவர்களின் விளக்கத்திற்கு பிறகே மருத்துவர் நோயாளிக்கு சிகிச்சைகளை தொடங்குவார்.

படிப்பை முடித்தபிறகு, இதய மருத்துவத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் மருத்துவமனைகள்,கிளினிக்குகள்,மறுவாழ்வு மையங்கள்,நர்சிங் கேர் சென்டர்கள் போன்றவற்றில் வேலை செய்யலாம். மாணவர்கள் தங்கள் அனுபவத்திற்கும், இத்துறையில் அவர்களுக்கு உள்ள அறிவுத்திறனுக்கும் ஏற்ப வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.

அதேதுறையில் Surgery in M.Sc., அல்லது MD போன்ற உயர் படிப்புகளையும் தொடரலாம். மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியாளர்களாகவும் அல்லது ஆசிரியர்களாகவும் பணியாற்றலாம்.

பிரிவுகள்:

ECG நுட்பவியலாளர் :

நெஞ்சுவலி பாதிப்பு இருக்கும்போது இ.சி.ஜி.கருவியில் இருக்கும் மின்குமிழ்கள் நோயாளியின் உடலில் பொருத்தி இ.சி.ஜி.கருவியுடன் இணைத்து இதயத்தில் உண்டாகும் மின்மாற்றங்களை பரிசோதனை செய்வார்கள்.

ECHO ஸ்கேன் நுட்பவியலாளர்கள் :

செவியால் உணர முடியாத இதயத்தின் ஒலியை உடலின் உட்பாகத்தை படமெடுத்து இதய ஒலிகளை அறிந்து இதயத்தின் திறன்களை மருத்துவர்களிடம் விளக்குவார்கள்.

TMT டெஸ்ட் :

Tread Mill Test என்பது Tread Mill எனப்படும் இயந்திரத்தில் நோயாளியை நடக்க வைத்து அப்பொழுது ஏற்படும் இதய மாற்றங்களை பதிவு செய்து அதன்மூலம் பரிசோதனை செய்வார்கள்.

CATH LAB :

ஆஞ்சியோகிராபி எனப்படும் இதய அடைப்பை கண்டறியும் சிகிச்சை முறை. மருத்துவர்கள் மட்டும் பரிசோதிக்கும் இந்தமுறையை இதய தொழில் நுட்பவியலாளர்கள் உடனிருந்து உதவி செய்வார்கள்.

By

Dr. C.Dineshkumar MDS.,

AHS துணை முதல்வர்

JKKN Dental College& Hospital

Kumarapalayam, Namakkal -638183.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!