JKKN பள்ளிகளில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

JKKN வித்யாலயா மற்றும் JKKN மெட்ரிக் மேனிலைப்பள்ளிகளில் "மாணவர்கள் கூட்டமைப்பின்சார்பில் நடந்த கருத்தரங்கம்.
students led conference-JKKN வித்யாலயா மற்றும் JKKN மெட்ரிக் மேனிலைப்பள்ளிகளில் "மாணவர்கள் கூட்டமைப்பின்சார்பில் 7ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்" ( STUDENTS LED CONFERENCE ) பள்ளி வளாகத்தில் முதல்வர் ரம்யா தலைமையில் நடைபெற்றது.
இதில் 'காலநிலை மாற்றத்தின் விளைவுகள்' 'இயற்கை சீற்றங்கள்' 'பொருளாதார வளர்ச்சியில் வரி மற்றும் ஜி.எஸ்.டி' என்பன போன்ற பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.students led conference
students led conference
வரி
இதில் மறைமுகவரி என்ற தலைப்பில் மாணவர் கண்ணன் பேசும்போது, 'மறைமுகவரி என்பது பொருள்களை உற்பத்தி செய்யும் போது செலுத்துகின்ற கலால் வரி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும்போது செலுத்தப்படும் சுங்கவரி, பொருள்களை வாங்கும் போது செலுத்துகின்ற மதிப்பு கூட்டு வரி மற்றும் தொழில் வரி போன்றவை மறைமுக வரிஆகும். இந்தியாவில் 65 சதவிகிதம் மறைமுக வரிகளாக பெறப்படுகின்றன. கலால் வரி என்பது பொருள்கள் அல்லது சேவைகளை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களை வாங்கும் போது விதிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
students led conference
சரக்கு மற்றும் சேவை வரி பற்றி மாணவி வர்சணா விரிவாக பேசினார். அதில், சரக்கு மற்றும் சேவை வரி என்பது ஒரு மறைமுக வரியாகும். மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக விதிக்கப்படும் ஒற்றை வரியாகும்.இவ்வரியானது 2017 ஜூலை 1 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த அமைப்பின் நிர்வாக தலைவராக நிர்மலா சீதாராமன் அவர்கள் செயல்படுகிறார் எனவும் மாணவி பேசினார்.
students led conference
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மற்றும் காரணங்கள் என்னும் தலைப்பில்' மாணவி சப்னம் ரஸ்மி பேசியதாவது, மனிதர்களின் செயல்களால் ஏற்படுத்தப்படும் காலநிலை மாற்றமே கடந்த சில வருடங்களாக மனிதர்கள் சந்தித்து வரும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தால் தொடர்ந்து பல்வேறு விதமான இயற்கை பேரழிவுகள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக அமேசான் காட்டுத்தீ, ஆஸ்திரேலியா காட்டுத்தீ, வறட்சி,வெள்ளம், சுனாமி,நிலநடுக்கம் என ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நிகழ்வு நடைபெறுவது தொடர் கதையாகி விட்டது. காலநிலை மாற்றத்திற்கு சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணிகளில் கார்பன் -டை- ஆக்சைடு வெளியேறுவதும் ஒரு காரணம்.
students led conference
அவற்றில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. சூரிய சக்தியின் வெளிப்பாடுகளில் சில மாறுபாடுகள் நிகழ்கின்றன. அதனால் எரிமலை வெடிப்பு மற்றும் வெந்நீர் ஓடை ஆகியன உருவாக காரணமாக அமைகின்றன. மனிதன் பூமி மீதான ஆதிக்கங்களால் சுற்றுச்சூழலில் மாற்றங்கள் உருவாகின்றன. ஆதலால் காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியை பாதுகாக்க நாம் முன்வர வேண்டும். உலக நாடுகள் விழித்துக் கொண்டு செயல்பட நாம் குரல் கொடுக்க வேண்டும். 'நாம் நினைத்தால் மட்டுமே முடியும்' என பேசினார்.
இவ்விழாவில் 70க்கும் மேட்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் பள்ளி இருபால் ஆசிரியர்கள், பெருந்திரளான பெற்றோர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் மூலம் மாணவர்கள் புத்தகக் கல்வி மட்டுமல்லாமல் உலகளாவிய கல்வியையும், தன்னம்பிக்கையையும் கற்றுக் கொள்கின்றனர் என்பது உறுதியாகிறது என்று பெற்றோர் மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu