JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் மாணவர் தலைமையிலான LED மாநாடு
29ம் தேதி நடைபெறவுள்ள மாணவர் மாநாடு.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் -, JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் மாணவர் தலைமையிலான LED மாநாடு வரும் 29ம் தேதி புதன்கிழமையன்று மதியம் 2.00 மணிமுதல் 4.00 மணிவரை கல்லுரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த LED மாநாடு, JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மாணவர்கள் சார்பில் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் ஆண்டு பயிலும் உமாதேவி, சுபிக்ஷா, ஆனந்தவள்ளி ஆகியோர் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் என்ற தலைப்பிலும்,
தனுஷ்., வேலவன் , சபரிவாசன் ஆகியோர் ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற தலைப்பிலும்,
இரண்டாம் ஆண்டு பயிலும் மோகனா, ரம்யா, கௌசல்யா , பிரியங்கா, தரணி ஆகியோர் மெக்கானிசம் ஆஃப் பயோ பேட்டரி என்ற தலைப்பிலும்
தாகர்,. பிரேம்குமார், கோகுல், ஜெயகிருஷ்ணா, தீரேஷ்வரன் ஆகியோர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்ற தலைப்பிலும் உரையை நிகழ்த்த உள்ளனர்.
இந்த LED மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை துணை விரிவுரையாளர் நிர்மல் பிரித்திவ் ராஜ் மாணவர் தலைமையிலான இந்த மாநாட்டை துவக்க வைக்கிறார்.
இந்த மாணவர் மாநாட்டில் கல்லூரி முதல்வர் ரூபன் தேவபிரகாஷ், துணை முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறைத் தலைவர் ரம்யா மற்றும் துறை பேராசிரியர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். கலந்துகொள்ளவுள்ள சான்றோர் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்க மாணவர்கள் காத்திருக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu