கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்- மருந்து உற்பத்தியாளர் சந்திப்பு

கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்-   மருந்து உற்பத்தியாளர் சந்திப்பு

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில், நச்சு இயல் துறையில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில், கால்நடை மருந்து உற்பத்தியாளர்கள் - மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில், கால்நடை மருந்து உற்பத்தியாளர்கள் - இறுதியாண்டு மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. மருந்தியல் -நச்சியல் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேராசிரியர் ஜெகதீஸ்வரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் செல்வராஜு தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

கால்நடை மருந்தியல் மற்றும் நச்சியல் துறையில், முதல் இரண்டு மதிப்பெண்கள் பெற்றவர்கள் மற்றும் மருந்தியல் குவிஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்ப்பட்டன. கால்நடை உடற்கூறியல் துறை பேராசிரியர் பாலசுந்தரம், உதவி பேராசிரியர் ராஜா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில், மொத்தம் 21 கால்நடை மற்றும் கோழி மருந்து உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு, தங்களின் மருந்து தயாரிப்புகளை காட்சிக்கு வைத்து, மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். திரளான இறுதியாண்டு மற்றும் முதுகலை மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story