JKKN மருந்தியல் கல்லூரி மாணவன் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில் தங்கம் வென்று சாதனை

JKKN மருந்தியல் கல்லூரி மாணவன் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில் தங்கம் வென்று சாதனை
X

மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில் தங்கம் வென்ற மாணவனை பாராட்டும் JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி,செந்தாமரை மற்றும் இயக்குனர் ஓம் சரவணா ஆகியோர்.

மாநில அளவிலான 23 வயதுக்குட்பட்டோருக்கான மல்யுத்த போட்டியில் JKKN மருந்தியல் கல்லூரி மாணவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின், 5வது மாநில அளவிலான, 23 வயதுக்குட்பட்டோருக்கான மல்யுத்த போட்டி ஆகஸ்டு மாதம் ஈரோடு வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குமாரபாளையம் JKKN மருந்தியல் கல்லூரியின் பி.பார்ம் 2ம் அண்டு மாணவன் ஆதித்யா 55 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இவர் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.


செப்டம்பர் 1 முதல் 4ம் தேதி வரை கேரள மாநிலம் ராஜிவ் காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் 28 மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்றட்ட மல்யுத்த போட்டியாளர்களுடன் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டியில் பங்கு பெற்றார் .

தங்கம் வென்ற மாணவனை JKKN கல்வி நிறுவனங்களின், தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை, இயக்குனர் ஓம்சரவணா மற்றும் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.செந்தில் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். உடன் உடற்கல்வி இயக்குனர் சதீஸ் உள்ளார்.

Tags

Next Story