JKKN பார்மசி கல்லூரியில் மாநில அளவிலான கலாச்சார விழா

JKKN பார்மசி கல்லூரியில் மாநில அளவிலான கலாச்சார விழா
X
குமாரபாளையம், JKKN பார்மசி கல்லூரியில் மாநில அளவிலான கலாச்சார விழா நடைபெறவுள்ளது.

குமாரபாளையம், JKKN பார்மசி கல்லூரியில் மாநில அளவிலான கலாச்சார விழா நடைபெறவுள்ளது. கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான மருந்தியல் கலாச்சார விழா (ஆகம-1.0) நடத்துவதற்கான திட்டமிடல் பணிகள் நடந்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN பார்மசி கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவ,மாணவிகள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த பார்மா கலாச்சார விழா இளைஞர்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாகவும் மற்றும் பார்மசி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு களமாகவும் இருக்கும். மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பார்மசி கல்லூரிகள் இந்த விழாவில் பங்கேற்கின்றன. இந்த கலாச்சார விழா JKKN மருந்தியல் கல்லூரியில் 24ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

Tags

Next Story
the future of ai in healthcare