வாங்க.. ஸ்டூடெண்ட்ஸ் நீங்களும் கட்டுரை எழுதுங்க.. உங்கள் படத்துடன் வெளியிடுகிறோம்..!
கல்லூரி மாணவர்களை எதிர்காலத்தில் சமூக உணர்வுள்ள குடிமகன்களாகவும், சமூக அக்கறை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்பதில் Instanews உறுதியான கருத்தைக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் மாணவர்கள் சிந்தனையாளர்களாக, படைப்பாளிகளாக, கண்டுபிடிப்பாளர்களாக உருவாகவேண்டும் எனில் அவர்கள் சிந்திக்கத்தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். அந்த சிந்தனைக்கு அடித்தளம் அமைக்கும் விதமாக மாணவர்களுக்கு கட்டுரை எழுதும் வாய்ப்பை வழங்குகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. நீங்களும் கட்டுரை எழுதலாம். உங்கள் திறமைக்கு ஒரு அங்கீகாரம் வழங்க வருகிறது, Instanews டிஜிட்டல் செய்திதளம். நீங்கள் எழுதும் கட்டுரைகள் பிரசுரத்துக்கு உகந்ததாக இருப்பின் உங்கள் புகைப்படத்துடன் உங்கள் கட்டுரை Instanews செய்தி தளத்தில் வெளியிடப்படும்.
உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தலைப்பு - 'கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய அரசு. சரியான செயல்பாடா? அல்லது சடுதியில் எடுத்த முடிவா?'
ஏப்ரல் 25ம் தேதி வரை கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படும். உங்கள் கட்டுரைகளை அனுப்பவேண்டிய முகவரி : chiefeditor_instanews.city@jkkn.org
இந்த தலைப்பில் உங்கள் சிந்தனைக் குதிரையை கட்டவிழ்த்து விடுங்கள். சிறந்த கட்டுரைகள் உங்கள் புகைப்படத்துடன் வெளிவரும். எடுங்கள், உங்கள் பேனாவை. தீட்டுங்கள் உங்கள் எண்ணங்களை. உங்களின் வெற்றிக்கு Instanews டிஜிட்டல் செய்திதளம்,வாழ்த்துகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu