வேலைக்கு என்ன படிப்பு என்பது முக்கியமில்லைங்க..திறமைதான் முக்கியம்..!

வேலைக்கு என்ன படிப்பு என்பது முக்கியமில்லைங்க..திறமைதான் முக்கியம்..!
X
நல்ல வேலைக்கு போகணும்னா.. திறமையை வளர்த்துக்கணும். என்ன படிச்சிருக்கோம் என்பது அப்புறம்தான்.

பிளஸ் 2 முடிச்சிட்டிங்களா..? எதைப்படிக்கலாம் என்ற எண்ணம் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தலாம். ஆனால், டோன்ட் ஒர்ரி கைஸ். இப்பல்லாம் எதைப்படிச்சாலும் வேலை கிடைக்கும். ஆனால் திறமை இருக்கணும். அதுதான் இன்னிக்கு வேலைக்கான முகவரி. ஏதாவது ஒரு வகையில் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளனும்.


ஒன்னு பாடத்தில் நல்ல தெளிவு. அல்லது நன்றாக பேசுதல், நன்றாக எழுதுதல், உலக நடப்பை தெளிவாக தெரிந்து வைத்திருத்தல், நல்ல போட்டோ எடுக்கும் நுணுக்கம் தெரிதல், சிந்தனைக்கு ஏற்ப ஓவியம் வரைதல், நல்ல கவிதை அல்லது கதை எழுதுதல், தொழில்நுட்பத்தில் நல்ல நுண்ணறிவு பெற்றிருத்தல், குழந்தைகளுக்கு நல்ல கதைகளை சொல்ல தெரிதல் இப்படி ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.


படிக்கும் காலத்தில் நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும். வாசிப்பு உங்களை பல கோணங்களில் சிந்திக்க வைக்கும். தனித்திறன்களை வளர்க்கும். அதனால், வேலை தேடுவதற்கு முன்னர் திறமையை வளர்த்துக்கோங்க. வேலைக்கு திறமை முக்கியமே தவிர படிப்பு அல்ல. பேருக்கு ஒரு பட்டம். அதுதான் இன்றைய நிலை. அதனால், டியர் கைஸ் திறமை வளர்த்துக்கோங்க.

இப்ப பிளஸ் 2 முடிச்சதும் என்னென்ன பாடபிரிவுகளில் படிக்கலாம் என்று பார்ப்போம். பின்னர் ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியா பார்ப்போம்.

1. BA (Bachelor of Arts), 2. BA (Hons),3. Fine Arts courses, 4. Performing Arts course, 5. BCA, 6. Management courses, 7. Integrated law courses 8. Journalism courses, 9. Hotel Management courses, 10. Event management courses, 11. Aviation courses, 12. Fashion Design courses, 13. Travel and tourism courses, 14. Animation and multimedia courses, 15. Teacher training courses, 16. Diploma courses, 17. Graphic design courses 18. Home science courses, 19. Photography courses, 20. BSW (Bachelor of Social Work)

இப்படி பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் உங்கள் தேடுதல் எது என்பதுதான் முக்கியம். உங்களுக்கு அடிப்படையாக ஒன்றிலோ அல்லது பல பிரிவுகளிலோ ஆர்வம் இருக்கலாம். இதில் கூடுதல் ஆர்வம் உள்ள பிரிவு எதுவோ அதை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

வேலைவாய்ப்பு மற்றும் சம்பளம் :

ஓகே கைஸ், அடுத்ததுல நாம ஒவ்வொரு பிரிவையும் தனித்தனியா பார்ப்போம். உங்களுக்கு எதில் ஆர்வமோ, அதை தேர்வு செய்து படீங்க. இந்த படிப்பை படித்தால் என்ன வேலை,கிடைக்கும். அதற்கு சம்பளம் எவ்வளவு கிடைக்கும் போன்ற எல்லா விபரங்களும் உங்களுக்கு சொல்வோம். உங்களுக்கு கல்வி வழிகாட்டுவதில் Instanews மகிழ்ச்சியடைகிறது. (இன்னும் பேசுவோம்)

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!