JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை சார்பில் மாநில அளவிலான பயிலரங்கம்
பேராசிரியர் டாக்டர்.கார்த்திகேயன், கணிதத்தில் நிஜ வாழ்க்கையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விவரிக்கிறார்
கணிதத்துறை சார்பில் நடந்த இப்பயிலரங்கிற்கு சிறப்பு விருந்தினராக, ஈரோடு ஸ்ரீ வாஸவி கல்லூரியின் கணிதத்துறை உதவிப் பேராசிரியர் டாக்டர்.கார்த்திகேயன், காளிப்பட்டி, மகேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதத் துறை உதவிப் பேராசிரியர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறை உதவிப் பேராசிரியர் ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் டீன் Dr.பரமேஸ்வரி சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார்.
சிறப்பு விருந்தினர் பேராசிரியர் டாக்டர்.கார்த்திகேயன் கணிதத்தில் நிஜ வாழ்க்கையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய நுண்ணறிவை வழங்கினார்.
உதவிப் பேராசிரியர் சக்திவேல், வரைபடக் கோட்பாட்டின் பயன்பாடு பற்றிய நுண்ணறிவை வழங்கினார். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தலைப்புத் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மாணவர்களின் கேள்விகளுக்கான சந்தேகங்களை வளவாளர் நிவர்த்தி செய்தார்.
இந்த ஒரு நாள் பயிலரங்கில் 70 மாணவர்கள் மற்றும் கணிதப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். அமர்வின் முடிவில் கணிதத்துறை உதவிப் பேராசிரியர் பூங்கொடி நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu