போந்தவாக்கம் கலைமகள் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
போந்தவாக்கம் கலைமகள் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் முருகன் பார்வையிட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே போந்தவாக்கம் ஊராட்சியில் கலைமகள் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.இப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு,பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ.வி.ஜானகிராமன் தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாகி ராகவன்,உதவி திட்ட அலுவலர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில்,சிறப்பு அழைப்பாளராக தொடக்க கல்வியின் பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலர் எஸ்.செந்தில்முருகன் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். அப்பொழுது மாணவர்கள் இந்திய விண்வெளி சாதனைகள்,மாசுபடுதலின் வகைகள்,சந்திராயன்-3, கணித மேதைகள்,எண் விளையாட்டு,உடல் உறுப்புகள்,மின்சாரம் கையாளும் முறைகள், மறுசுழற்சி முறைகள், புகைப்படங்கள்,உணவு கலப்படம்,சாலை போக்குவரத்து,அணு அமைப்பு,5 வகை நிலங்கள், வைட்டமின்கள்,நீர் மேலாண்மை,பிதாகரஸ் விதிகள்,நியூட்டன் வளையம், காற்றுக்கு எடை உண்டு, மூலக்கூறுகளின் அமைப்பு, காடுகள்,காட்டு விலங்குகள், வீட்டு விலங்குகள்,உணவு சங்கிலி,உணவு வலை உள்ளிட்ட பல்வேறு வகையில் காட்சிப்படுத்தப்பட்டவைகளை மாணவர்கள் சிறப்பாக விளக்கிக் கூறினர்.
இதனை பார்வையிட்ட மாவட்ட கல்வி அலுவலர் செந்தில்முருகன் சிறப்பாக காட்சிப்படுத்திய மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார்.இக்கண்காட்சி சிறப்பாக அமைய அயராது உழைத்த ஆசிரியைகளை பாராட்டி பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu