road safety awareness rally-JKKN பல்மருத்துவக் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

road safety awareness rally-JKKN பல்மருத்துவக் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
X

road safety awareness rally-சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா, சங்ககிரி காவல் ஆய்வாளர் தேவி, சங்ககிரி ரோட்டரி சங்கம் 2982-ன் தலைவர் தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

road safety awareness rally-குமாரபாளையம் JKKN பல் மருத்துவக்கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

road safety awareness rally-நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், JKKN பல்மருத்துவக்கல்லூரி, தமிழ்நாடு காவல்துறை, சங்ககிரி ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை சங்ககிரியில் நடத்தினர்.


சங்ககிரி காவல்நிலையம் முன்பு தொடங்கிய இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா, சங்ககிரி காவல் ஆய்வாளர் தேவி, சங்ககிரி ரோட்டரி சங்கம் 2982-ன் தலைவர் தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் JKKN பல்மருத்துவக்கல்லூரி மாணவர்கள், JKKN துணை மருத்துவவியல் கல்லூரி மற்றும் JKKN கலை அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தியபடி பேரணி நடைபெற்றது. இந்த பேரணி சங்ககிரி நகரின் முக்கிய சாலை வழியாக வந்து சங்ககிரி நீதிமன்றம் முன்பாக முடிவடைந்தது.


பின்னர் மாணவ,மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த பேரணியில் JKKN பல்மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர். இளஞ்செழியன், சமூக நல பல்மருத்துவத்துறைத் தலைவர் டாக்டர்.நவீன்ராஜ், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தற்போதைய வாகனப்பெருக்கம் பல விபத்துக்களுக்கு வழிவகுக்கிறது. பல இளைஞர்களுக்கு சாலையில் வாகனங்களை எவ்வாறு இயக்குவது என்ற விழிப்புணர்வு இல்லாமல் வாகனத்தில் ஏறியவுடன் அதிவேகத்தில் பறக்கின்றனர். மதியின்றி அதிவேகம் போனால் உயிர்போகும் நிலை வரும் என்பதையும், வீட்டைவிட்டு வெளியே சென்ற தங்கள் பிள்ளை வீடு வந்து சேர்வான் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் பெற்றோரையும் இளைஞர்கள் நினைத்துப்பார்த்து வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்கவேண்டும்.


road safety awareness rally

அதேபோல சாலைகளில் நடந்து செல்வோரும் சாலை விதிமுறைகளை அறிந்து நடக்கவேண்டும். எப்போதும் இடதுபுறத்தில் நடந்து செல்வது, சாலையில் zeebra cross -ல் சாலையை கடப்பது போன்ற அடிப்படை விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும். இவ்வாறான மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது கடமையாகும். அதை முறையாக பின்பற்றுவது மக்களின் கடமையும் ஆகும்.

Tags

Next Story
மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்