Riddles for kids in tamil-கதையை உடைத்து விடுவிப்போமா? விடுகதை..விடுகதை..!

Riddles for kids in tamil-கதையை உடைத்து விடுவிப்போமா? விடுகதை..விடுகதை..!

riddles for kids in tamil-விடுகதைகள் (கோப்பு படம்)

விடுகதை என்பது ஒரு பொருளை நேரடியாக கூறாமல் மறைத்துக் கூறுவது. அதில் ஒளிந்திருக்கும் மறைபொருளை கண்டுபிடிப்பதே விடுகதை.

Riddles for kids in tamil

விடுகதைகள் பல செவி வழியாக நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்றைய தலைமுறை பிள்ளைகள் வரை வந்தடைந்து இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் சிந்தனைகளையும் தூண்டும் வகையில் இருக்க கூடியது விடுகதை.

கிராமங்களில் விடுகதை என்பது மிக சிறந்த ஒரு பொழுது போக்காக இருக்கும். பிறர் சிறப்பாக சிந்திக்கும் வகையில் ஒரு விடுகதை கூறி அதன் விடையை பிறர் கண்டுபிடிக்க இயலாத பட்சத்தில் அந்த விடுகதையின் விடையை நாம் கூறுவது என்பது அறிவு சார்ந்த ஒரு தனி பெருமை தான். விடுகதை என்பது சிந்திக்கும் தரினை ஊக்குவிக்கிறது. சிந்தனையை சிதறவிடாமல் ஒருங்கிணைக்கும் பண்பினை விடுகதைகள் உருவாக்கும்.

Riddles for kids in tamil

இதோ குழந்தைகள் விரும்பும் , விடுகதைகள்- விடையுடன் :

1. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்? தேள்

2. பிடுங்கலாம். ஆனா பிடிங்கிட்டா நடமுடியாது அது என்ன? தலைமுடி

3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்? வெங்காயம்

4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? கரும்பு

5. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன? விழுது

6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? பட்டாசு

Riddles for kids in tamil

7. ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்? மூச்சு

8. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்? பூரி

9. கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்? காகம்

10. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள் ? வெண்டைக்காய்

11. கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்? பட்டுத்துணி

12. படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ? பட்டாசு

13. ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன? பற்கள்

Riddles for kids in tamil

14. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்? அகப்பை

15. காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன? சூரியன்

16. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன? சோளக்கதிர்

17. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ? உப்பு

18. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன? கடல்

19. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்? நிழல்

20. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன? சைக்கிள்

21. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன? கண்

22. ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?. ஆமை

Riddles for kids in tamil

23. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்? முட்டை

24. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ? அடுப்புக்கரி

25. உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்? பெயர்

26. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன? கண் இமை

27. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன? சிரிப்பு

28. வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன? நாய்

29. இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன? வாழை

30. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன? சோளம்

Riddles for kids in tamil

41. இவனும் ஒரு பேப்பர் தான்; ஆனால், மதிப்போடு இருப்பான். அது என்ன? பணம்

42. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.? கொசு

43. கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன? பூசனிக்கொடி

44. எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்? குடை

45. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்? தொலைபேசி

46. பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன? தேங்காய்

47. தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்? மீன் வலை

48. படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன? பட்டாசு

Riddles for kids in tamil

49. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன? பாய்

50. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன? சிலந்தி வலை

51. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்? சிலந்தி

52. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன? முதுகு

53. வீட்டிலிருப்பான் காவலாலி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்? பூட்டும் திறப்பும்

54. கொம்பு நிறைய கம்பு அது என்ன ? மாதுளம்பழம்

55. காட்டிலே பச்சை; கடையிலே கறுப்பு; வீட்டிலே சிவப்பு. அது என்ன? மரம்-கரி-நெருப்பு.

56. என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல்.தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை. நான் மறைக்கப்பட வேண்டியவன். நான் யார்? இரகசியம்

57. நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்? மணிக்கூடு

58. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன? ஈசல்

Riddles for kids in tamil

59. நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்? பென்சில்

60. விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன? தும்பிக்கை

61. கீழேயும் மேலேயும் மண்; நடுவிலே அழகான பெண். அது என்ன? மஞ்சள் செடி.

62. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ? அலாரம்

63. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன? தராசு

64. பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான். அவன் யார்? தேன்

65. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன? சிலந்தி

66. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன? தக்காளி

Riddles for kids in tamil

67. ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன? தோடு

68. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்? நுங்கு

69. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன? தொலைபேசி

70. வாயிலிருந்து நூல் போடுவான்; மந்திரவாதியும் இல்லை, கிளைக்குக் கிளை தாவுவான்; குரங்கும் இல்லை, வலைவிரித்துப் பதுங்கியிருப்பான்; வேடனும் இல்லை – அவன் யார்? சிலந்தி

Tags

Next Story