பி.எட்., (B.Ed.,) படிங்க..ஆசிரியர் ஆகுங்க..! மதிப்பிற்குரிய பதவி..!
B.Ed.,படிப்பு (மாதிரி படம்)
ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி ஆசிரியர்களிடம்தான் உள்ளது. அவர்களே ஒரு சிறந்த சமூகத்தை, ஒரு சிறந்த எதிர்காலத்தை, ஒரு சிறந்த நாட்டை, ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்குகின்றனர். அதனால் தான் ஆசிரியர் பணி மதிப்பிற்குரியதாக பார்க்கப்படுகிறது.
அடிப்படை தகுதி :
ஏதாவது ஒரு இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது ஒன்றே போதும் ஆசிரியர் ஆவதற்கு. ஆமாம், பி.எட்.,(B.Ed.,) படிங்க. ஆசிரியராகுங்க. ஒவ்வொரு பதவிக்கும் ஒரு தொழில்முறை படிப்பு இருக்கும். அந்த வகையில் ஆசிரியர் ஆவதற்கு பி.எட்., கட்டாயம்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜே.கே.கே.என். ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் பி.எட்., படிப்பதற்கு மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கப்படுகிறது. ஒரு சிறந்த ஆசிரியர் உருவாகுவதற்கு தகுந்த வழிகாட்டுதல்களை செய்து பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை உருவாக்கிய கல்வி நிறுவனம்.
கற்பித்தல் திறனை வளர்க்கும் கல்வி வழங்கும் சிறந்த ஆசிரியர்களை கொண்ட ஆசிரியர் கல்வி நிறுவனம்,ஜே.கே.கே.என். ஆசிரியர் கல்வியியல் கல்லூரி. பி.எட்., படித்தால் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன. அதிலும் கற்பித்தல் திறன் சிறப்பாக இருந்தால் நல்ல சம்பளத்தில் வேலை பெறலாம். அதற்கு மாணவர்களின் தனித்திறனும், அர்ப்பணிப்புமே அடித்தளமாக அமையும்.
மேலும் அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி அரசு பள்ளிகளில் ஆசிரியராகவும் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு சிறந்த இடத்தை பெற,மதிப்பிற்குரியவராக வாழ வாருங்கள் பி.எட்., படியுங்கள்.
- by R.வசந்தி, lecturer B.ed காலேஜ், ஜே.கே.கே.என். ஆசிரியர் கல்வியியல் கல்லூரி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu