JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர் மாநாடு
JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் நடந்த மாணவர்களுக்கான மாநாடு.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த மாணவர் மாநாடு நடைபெற்றது. 15ம் தேதி புதன்கிழமையன்று காலை 10.30 மணிக்கு கல்லூரி வளாக அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் டி.ரூபன் தேவபிரகாஷ் தலைமை ஏற்றார். துறைத் தலைவர் பேராசிரியை கலைவாணி, முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இ.இ.இ. மூன்றாம் ஆண்டு மாணவர் சீனிவாசன் அனைவைரையும் வரவேற்றுப்பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் டி.ரூபன் தேவபிரகாஷ் விழாவை துவக்கி வைத்து, மாணவர்களுக்கான மாநாட்டில் 'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பு' என்ற கருப்பொருள் குறித்து விளக்கினார்.
EEE உதவி பேராசிரியை தேவி கருணாம்பிகா சிறப்புரையாற்றினார். அவரது உரையின் மூலமாக மாணவ, மாணவிகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, அதன் அவசியம் போன்றவற்றை கற்றுக்கொண்டனர். இறுதியாக அவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது. கற்றுக்கொண்ட பாடங்கள், பெறப்பட்ட நுண்ணறிவுகள் மற்றும் செய்யப்பட்ட தொடர்புகள் ஆகியவற்றை முழு பயன்பாடுகளாக நம் வாழ்க்கைக்கும், நமது சமூகத்துக்கும் இந்த உலகிற்கும் பயன்படுத்த வேண்டும் என்றும் பேராசிரியை வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பேட்டரி கழிவு மேலாண்மை குறித்து விளக்கினர். மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சோலார் பார்க் திட்டம் குறித்து விளக்கினர். மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் வாகனம் முதல் கிரிட் தொழில்நுட்பம் குறித்து விளக்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu