எல்லோரும் படிக்கிறதை நாம ஏன் படிக்கணும்? அரிய படிப்புகளில் அள்ளுங்க வேலையை..!

எல்லோரும் படிக்கிறதை நாம ஏன் படிக்கணும்? அரிய படிப்புகளில் அள்ளுங்க வேலையை..!
X
எல்லோரும் படிக்கறதை நாமும் படிச்சா வேலை கிடைக்குமா? யாருமே படிக்காததை படிச்சி, உடனே வேலை வாங்குவோம்.

இந்தியா பொறியியல் கல்விக்கு பெயர் பெற்ற நாடு என்பது நாம் அறிந்ததே. ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் பொறியியல் பட்டதாரிகளை இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உருவாக்கி வெளியனுப்புகின்றன. இவ்வளவு பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கப்படும்போது எல்லோரும் படிக்கறதை நாமும் படிச்சால் வேலை கிடைக்கிறது சிரமம். அதுவே எல்லாரும் படிக்காததை படிச்சால்.. இப்பிடி மாத்தி யோசிங்க. சூப்பரா ஒரு வேலைய வாங்குங்க..!

பிளஸ் 2முடிச்சதும் அடுத்தது என்ன என்று குழப்பத்தில் உள்ளவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் ஒரு பிரிவாகவும் மற்றும் அதிக மாணவர்களால் தேடப்பாடாத ஆனால்,அரிய படிப்பாகவும் இது அமையும். எல்லாரும் படிக்கறதை படிச்சி வேலை தேடுறதை விட, யாரும் படிக்காததை படிச்சி சீக்கிரமே வேலைக்குப்போகலாமே. இதுதானே புத்திசாலித்தனம்.

அரிய பொறியியல் படிப்புகள் :

தமிழ்நாட்டில், பல தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பொறியியல் கல்லூரிகள் ஏரோநாட்டிகல், ஏரோஸ்பேஸ், ரோபோடிக்ஸ், இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங் போன்ற அரிய பொறியியல் படிப்புகளை வழங்குகின்றன. ஒரு வித்தியாசமான துறையில் பிரகாசிக்க விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வகையான அரிய பொறியியல் பிரிவுகளில் ஏதேனும் இளங்கலைப் பட்டப்படிப்பில் சேரலாம். இந்த மாதிரியான படிப்புகள் வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது.

சிறந்த தொழில் வாய்ப்புள்ள அல்லது தனித்துவமான B.E/B.Tech பொறியியல் படிப்புகளை தேர்வு செய்து படிப்பது நமக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும்;உறுதிப்படுத்திடும்.தமிழகத்தில் உள்ள சில அரிய பொறியியல் படிப்புகளை இங்கே நீங்கள் காணலாம். சென்னையில் ஏரோநாட்டிக்கல் மற்றும் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிப்புகளை தேர்வு செய்ய கல்லூரிகள் உள்ளன.

உலோகவியல் பொறியியல் : (metallurgical engineering)

மெட்டலர்ஜிகல் இன்ஜினியரிங் என்பது பல்வேறு உலோகங்கள் அல்லது நமது அன்றாட வாழ்க்கை மற்றும் தொழில்களில் அதன் பயன்பாடுகளைப் பற்றிய ஆய்வுகளைப்பற்றியாதாகும். இந்த பாடத்திட்டத்தில், மாணவர்களுக்கு பொருள் அறிவியல் மற்றும் கனிம செயலாக்கம், இயற்பியல் உலோகம் மற்றும் பிரித்தெடுக்கும் உலோகம் போன்ற உலோகவியல் கருத்துக்கள் பற்றிய தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவு வழங்கப்படும்.

எளிமையான குறிப்பில், மாணவர்கள் உலோகத்தை பிரித்தெடுத்தல், சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி செய்யும் செயல்முறையை கற்றுக்கொள்வார்கள். நமது வாழ்வில் உலோகம் முக்கிய பங்கு வகிப்பதால், உலோகவியல் பொறியாளர்களுக்கான தொழில் வாய்ப்புகள் தனியார் துறையிலும், அரசுத் துறைகளிலும் அதிகம். உலோகவியலாளராக விரும்புபவர்களுக்கு இது பொருத்தமான பாடமாகும். உலோகவியல் பொறியியல் பட்டதாரிகள், ஆட்டோமொபைல், விண்வெளி, எண்ணெய், மின்சாரம், போக்குவரத்து, ஆற்றல், பயோ-மெடிக்கல், ஸ்டீல், அணு போன்ற பல்வேறு தொழில்களில் ஆராய்ச்சியாளர், வெல்டிங் பொறியாளர், செயல்முறைப் பொறியாளர், ஆலை உபகரணப் பொறியாளர் போன்றவற்றையும் தேர்வு செய்யலாம்.

சுரங்க பொறியியல் : (Mining Engineering)

சுரங்கப் பொறியியல் என்பது ஒரு தனித்துவமான பொறியியல் துறையாகும், இது இயற்கை சூழலில் இருந்து கனிமங்களை பிரித்தெடுத்தல் மற்றும் செயலாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரிவாகும். கனிம இருப்பு, அகழ்வாராய்ச்சி, உற்பத்தி, செயலாக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற சுரங்க நடவடிக்கைகளின் பல்வேறு நிலைகளில் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த சுரங்கப் பொறியாளர்கள் என்எல்சி, கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ராக் மெக்கானிக்ஸ், ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் போன்ற பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இந்தியாவைத் தவிர, சவுதி அரேபியா, கத்தார், உக்ரைன், இந்தோனேஷியா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மைனிங் பட்டதாரிகள் மைன் பிளானர், மைன் டிசைனர், எக்ஸ்கவேட்டர் மற்றும் மைன் வென்டிலேஷன் இன்ஜினியர் போன்ற பணிகளுக்கு எதிர்பார்க்கின்றனர்.

கல்லூரிகள் :

அண்ணா பல்கலைக்கழகம், CEG (College of Engineering Guindy ) வளாகம், AMET பல்கலைக்கழகம் போன்றவை.

(இன்னும் வரும்)

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!