JKKN ஸ்ரீசக்திமயில் செவிலியர் கல்லூரி சார்பில் உலக ரேபிஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

JKKN ஸ்ரீசக்திமயில் செவிலியர் கல்லூரி சார்பில் உலக ரேபிஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

JKKN ஸ்ரீசக்திமயில் நர்சிங் கல்லூரி சார்பில் நடந்த ரேபிஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

Rabies Day -குமாரபாளையம், JKKN ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி சார்பில் உலக ரேபிஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Rabies Day -உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு,ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி சார்பில் ரேபிஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையின் செவிலியர் கண்காணிப்பாளர் டாக்டர்.பிரேமகுமாரி துவக்கி வைத்து ரேபிஸ் நோயின் தாக்கம், எப்படி பரவும் என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின், மாணவ,மாணவியர்கள் ரேபிஸ் நோய் தடுப்பு மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து, துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இந்த நிகழ்ச்சியில் 60க்கும் மேட்பட்ட மாணவ, மாணவியர்கள் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil