உடனடி வேலை கிடைக்க பார்மசி படிங்க..! (மாணவர்களுக்கு வழிகாட்டும் புதிய தொடர்)
மருந்தியல்துறை(பார்மசி) என்பது மருத்துவ அறிவியலை வேதியியலுடன் இணைக்கும் மருத்துவ சுகாதார அறிவியலாகும். மேலும் இது மருந்துகளின் கண்டுபிடிப்பு, உற்பத்தி,பாதுகாப்பான, பயனுள்ள பயன்பாடு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றைக் காரணிகளாக கொண்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் தாவரங்களையும் பிற இயற்கை பொருட்களையும் மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மருந்தியல் துறை (பார்மசி)தனி தொழில்துறையாக மாறியது.
பார்மசி துறையில் பட்டயபடிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்களை மருந்தாளுனர்கள் (Pharmacists- ஃபார்மசிஸ்ட்ஸ்) என்று அழைப்பார்கள். உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுனர் வகிக்கும் பங்களிப்பிற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 25ம் தேதி, உலக மருந்தாளுநர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மருந்தாளுநர்கள், மருந்து தயாரிப்பதற்கும், மருந்தைப் பயன்படுத்துவதற்கும், சேமிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் மற்றும் விநியோகிப்பதற்கும் முக்கிய பங்காற்றுகிறார்கள். கடந்த 40 ஆண்டுகளில், மருந்தாளரின் பங்கு மருத்துவ உதவியாளர் என்ற நிலையிலிருந்து "மருந்து சிகிச்சை மேலாளர்" என மாறிவிட்டது. 21 ம்நூற்றாண்டில், மருந்தியல் தொழில் நோயாளியை மையமாகக் கொண்ட நடைமுறையை நோக்கி தொடர்ந்து நகர்கிறது.
மருந்தாளுநர்கள் புதிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகளை ஆராய்ச்சி செய்து, வடிவமைத்து, உருவாக்கி, சோதனை செய்து, அவற்றின்பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்கிறார்கள். தொழில்துறையில், மருந்தாளுநர்கள் மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் வேலை செய்வார்கள். இவர்கள் மருந்து ஆரம்ப வடிவமைப்பு முதல் மருந்து வெளியீடு மற்றும் விற்பனை வரை வெவ்வேறு நிலைகளிலும் அவர்கள் ஈடுபடுவார்கள்.
இந்தியாவில் பலவிதமான பார்மசி பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன: டிப்ளமோ இன்பார்மசி (டிபார்ம்), இளங்கலை மருந்தியல் (பிபார்ம்), மாஸ்டர் ஆஃப் பார்மசி (எம்பார்ம்), மருந்தியல் அறிவியல் முதுகலை [MS(Pharm)] மற்றும் மருந்தியல் முதுகலை தொழில்நுட்பம் [ MTech (Pharm)], மருந்தியல் மருத்துவர் (PharmD).
மருந்தாளுநர்கள் உரிமம் இந்தியாவில் பெறுவதற்கு பட்டய/இளங்கலை மருந்துபடிப்பு, முதுகலை மருந்து படிப்பு அல்லது டாக்டர் ஆஃப் பார்மசி பட்டம் பெற்றிருக்கவேண்டும்.பார்மசி சட்டம், 1948ன் கீழ் மருந்தாளுநராகப் பதிவு செய்வதற்காக, பார்மசியில் ஏதேனும் ஒரு படிப்பைத் தொடர விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும், தாங்கள் சேர விரும்பும் குறிப்பிட்ட நிறுவனம் இந்திய பார்மசி கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளதா என முதலில் உறுதி செய்யவேண்டும்.
ஆசியாவிலேயே முதல் மருந்தியல் கல்லூரி 1842 ம் ஆண்டு போர்த்துகீசியர்களால் கோவாவில் தொடங்கப்பட்டது என்ற தனிச்சிறப்பு இந்தியாவிற்கு உண்டு. 1932 இல், பேராசிரியர் மகாதேவ்லால் ஷ்ராஃப் (மருந்தியல் கல்வியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்) பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஒரு பார்மசி கல்லூரி துறையைத் தொடங்கினார்.மருந்தக டிப்ளோமாக்கள் (D.Pharm) மாநில அரசுகளால் கட்டுப்படுத்தப்படும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி வாரியங்களால் வழங்கப்படுகின்றன. பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டின் விவரங்கள் பிசிஐ (இந்திய பார்மசி கவுன்சில்) மூலம் வழங்கப்படுகின்றன. B.Pharm மற்றும் M.Pharm கல்வி பல்வேறு பல்கலைக்கழகங்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டின் விவரங்களை அந்தந்த பல்கலைக்கழகங்கள் தீர்மானிக்கின்றன. பல்கலைக்கழகங்களால் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
D.Pharm (இரண்டுஆண்டு) : முடித்தவர்கள் மருத்துவமனை மருந்தகத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்தாளராகப் பணியாற்றலாம். B.Pharm: (நான்குஆண்டு) இந்தியாவில் தற்போதுள்ளபாடத்திட்டங்களின் படி, B.Pharm பட்டம் முக்கியமாக மருந்து தயாரிப்புத் துறையில் பணிபுரிய மாணவர்களை தயார்படுத்துகிறது.
M.Pharm (இரண்டுஆண்டு): B.Pharm முடித்தமாணவர்கள் M.Pharm படிக்கதகுதியுடையவர்.
Pharm.D என அழைக்கப்படும் மருந்தியல் பட்டம் ஆறு வருடப்படிப்பாகும்.
இந்தியாவில் மருந்துத்துறையின் வளர்ச்சியுடன் மருந்தாளுனர்களுக்கான தேவை மேலும் அதிகரித்து வருகிறது. உடனடி வேலைவாய்ப்புக்கு சிறந்த படிப்பு பார்மசி.உடனடி வேலை கிடைக்க..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu