வெளிநாட்டு வேலைவேணுமா? பி.பார்ம் (B.Pharm.) படிங்க: கைநிறைய சம்பாதிங்க
பார்மசி கல்லூரி மாணவர்கள்.
இளங்கலை மருந்தியல் பட்டபடிப்பு(B.Pharm) நான்கு ஆண்டுகால படிப்பாகும். பார்மசி துறையில் பட்ட படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்களை மருந்தாளுனர்கள்(Pharmacists- ஃபார்மசிஸ்ட்ஸ்) என்று அழைப்பார்கள். பல நாடுகளில், மருந்தாளுநராகப் பயிற்சி பெறுவதற்கு இந்தப் பட்டம் ஒரு முன் நிபந்தனையாகும்.
மிக பிரகாசமான வெளிநாட்டு வேலைவாய்ப்ப்புகள் பி. பார்ம் படிப்பிற்கு உண்டு. பார்மா பட்டதாரிக்கு வானமே எல்லை, தகுதி, மற்றும் திறமையை பொறுத்து, பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வேலைவாய்ப்புகள் உள்ளன. அரபு நாடுகளில் மருந்தாளுநர்களுக்கு (Pharmacists- ஃபார்மசிஸ்ட்ஸ்), பல வேலைவாய்ப்புகள் உள்ளன.
மருத்துவமனை மருந்தாளுனர்கள் (Clinical Pharmacist )
மருத்துவமனைமருந்தாளுனர்கள் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையில் பாலமாக இருந்து நோயாளிக்கு தேவையான மருந்து சம்பந்தமான ஆலோசனைகளை வழங்குவார்கள். மருத்துவமனை மருந்தாளுனர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் எந்த வகையான மருந்து மிகவும் பொருத்தமானது என்பதை தீர்மானிப்பார்கள். மேலும் மருந்துகளின் விளைவுகளை அடிக்கடி கண்காணித்து, மருந்துகளின் விளைவுகள் குறித்து தங்கள் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குவார்கள்.
அரபு நாடுகளில் வேலைவாய்ப்பு :
அரபு நாடுகளில் மருத்துவமனை மருந்தாளுனர்கள் பணியில் சேர்வதற்கு, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். நீங்கள் தேர்தெடுக்கும் அரபு நாடுகளுக்கு தகுந்தவாறு அந்த நாடுகளின் சுகாதாரத் துறையினால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். உதாரணமாக
1. துபாயில் மருத்துவமனை மருந்தாளுனர்கள் பணியில் சேர்வதற்கு துபாய் சுகாதாரத்துறையினால் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் (DHA Prometric Exam)
2. அபுதாபியில் மருத்துவமனை மருந்தாளுனர்கள் பணியில் சேர்வதற்குHAAD (Health Authority of Abu Dhabi) தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
இந்த தேர்வினை நீங்கள் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையங்களில் எழுதலாம். இந்தப்பணிக்கு இந்திய ரூபாயில் சுமாராக 90,000 -200000 மாத ஊதியமாக பெறலாம்.
வளைகுடா நாடுகளில் மருந்துத் துறையில் சிறந்த ஊதியம் பெறும் இதர வேலைகள்:
• மருந்து விற்பனை பிரதிநிதி
• மருந்து வெளி விற்பனை பிரதிநிதி
• மருத்துவ தரவு மேலாளர்
• ஆராய்ச்சி விஞ்ஞானி
• மருந்தக மேலாளர்
• மருந்து உற்பத்தியாளர்
கல்லூரியை எப்படி தேர்ந்தெடுப்பது:
இளங்கலை மருந்தியல் பட்டபடிப்பு (B.Pharm) படிக்க விரும்பும் அனைத்து மாணவ மாணவிகளும், தாங்கள் சேர விரும்பும் குறிப்பிட்ட கல்வி நிறுவனம் இந்திய பார்மசி கவுன்சில்(PCI) அங்கீகாரம் பெற்றுள்ளதா என முதலில் உறுதி செய்ய வேண்டும். மேலும் அந்தகல்லூரி, பல்கலைக்கழகங்கள் அல்லது பல்கலைக்கழகத்துறையில் இணைந்த கல்லூரியா என உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
நீங்கள் பி.பார்ம் பற்றி மேலும் அறிய JKKN மருந்தியல் கல்லூரியை அணுகவும். இக்கல்லூரி இந்திய பார்மசி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது J. K. K. ரங்கம்மாள் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது.இணையதளமுகவரி: https://pharmacy.jkkn.ac.in/ தொடர்பு கொள்ளவேண்டிய போன் : 9345855001
வெளிநாட்டில் வேலை வேணுமா? கவலையை விடுங்க. சிறந்த கல்லூரியில் பார்மசி படிங்க..சிறந்த வேலைவாய்ப்பை பெறுங்க..!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu