/* */

பத்தாம் வகுப்பு தேர்வில் குழப்பம் ஏற்படுத்திய கேள்விகள்

பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குழப்பம் ஏற்படுத்திய மூன்று கேள்விகள் கேட்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

HIGHLIGHTS

பத்தாம் வகுப்பு தேர்வில் குழப்பம் ஏற்படுத்திய கேள்விகள்
X

கோப்புப்படம் 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், நேற்று ஆங்கில பாடத்துக்கான தேர்வு நடந்தது. இந்த முறை, சராசரி மாணவ - மாணவியரும் எளிதாக விடை எழுதும் வகையில், கேள்விகள் அமைந்திருந்ததாக, ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவித்தனர்.

மேலும், பெரும்பாலான கேள்விகள், புத்தகத்தின் பயிற்சி வினாக்களில் இருந்தும், மாணவர்கள் அடிக்கடி படித்த பாடங்களில் இருந்தும் கேட்கப்பட்டிருந்தன. இதனால், அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் ஆங்கிலப் பாடத்துக்கான வினாத்தாளில் 11, 18, 46 ஆகிய மூன்று கேள்விகளில் குழப்பம் இருப்பதாக தோ்வெழுதிய மாணவ, மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனா்.

பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு கடந்த 26-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது தோ்வாக ஆங்கில பாடத் தோ்வு கடந்த 28-ஆம் தேதி நடைபெற்றது. இந்த வினாத்தாளில் பகுதி 1-இல் 11-ஆவது கேள்விக்கு (ஒரு மதிப்பெண்) இரு விடைகள் சரியாக வரும் வகையில் இருந்ததால், மாணவா்கள் குழப்பம் அடைந்தனா். இந்த கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதேபோன்று பகுதி-2-இல் 18-ஆவது கேள்வி(2 மதிப்பெண்) தவறாக கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த மாணவா்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், பகுதி 4-இல் (8 மதிப்பெண்) 46-ஆவது ஆ கேள்வி, பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இல்லாதது கேட்கப்பட்டுள்ளதால் இந்தக் கேள்விக்கு விடை அளித்த மாணவா்களுக்கும் மதிப்பெண் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 1 April 2024 7:07 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  3. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  4. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  5. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  6. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...