JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரியில் ஆன்லைன் கருத்தரங்கம்

JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரியில் ஆன்லைன் கருத்தரங்கம்
X

ஸ்ரீ சக்தி மயில் கல்லூரியில் நடந்த கருத்தரங்கம்.

குமாரபாளையம், JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரியில் 2வது ஆன்லைன் வெபினார் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர்.ஜமுனாராணி, சிறப்பு பேச்சாளர் குறித்த அறிமுக உரையையும், வெபினார் கருத்தரங்கம் குறித்தும் பேசினார்.

ஆன்லைன் வெபினார் கருத்தரங்கிற்கு சிறப்பு பேச்சாளராக துபாயில் உள்ள சோபே மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டயாலிசிஸ் பிரிவில் பணியாற்றும் ரமேஷ் கலந்து கொண்டு துபாயில் நர்சிங் வேலையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கு விரிவான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கினார்.

மேலும் துபாயில் பணியாற்றும் செவிலியர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கிறது. மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களின் பெற்றோருக்கு இலவசமருத்துவ காப்பீடு, கல்வி உதவித் தொகை, உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது. மேலும்

எதிர்காலத்துக்கான நவீன தொழில் வாய்ப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

பின்னர் கருத்து விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இதில் பங்கேற்றவர்களுக்கு E- சான்றிழ் வழங்கப்பட்டது. இந்த வெபினாரில் சுமார் 200 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நாமக்கல் : ராசிபுரத்தில் திடீர் பனிமூட்டம் - பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி!