ஜேகேகேஎன் மருந்தியல் கல்லூரி சார்பில் தட்டாங்குட்டையில் என்.எஸ்.எஸ்.முகாம்

ஜேகேகேஎன் மருந்தியல் கல்லூரி சார்பில் தட்டாங்குட்டையில் என்.எஸ்.எஸ்.முகாம்
X

மக்களுக்கு விழிப்புணர்வு செய்தி.

ஜேகேகேஎன் மருந்தியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் என்.எஸ்.எஸ்.முகாம் நடந்தது.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம் மற்றும் ஜே.கே.கே.என் மருந்தியல் கல்லூரி என்.எஸ்.எஸ் பிரிவு ஆகியவை இணைந்து தாட்டாங்குட்டை கிராமத்தில் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை என்எஸ்எஸ் முகாமை நடத்தியது.கிராம வளர்ச்சி மற்றும் மதிப்புக் கல்வியை மட்டுமே கருத்தில் கொண்டு பல்வேறு சமூகப் பணிகள் நடைபெற்றன.

NSS முகாமின் ஒரு பகுதியாக, மார்ச் 19ம் தேதியன்று ஜேகேகேஎன் மருந்தியல் கல்லூரி இணைப்பேராசிரியர், டாக்டர். கண்ணன் கிராமப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து எவ்வாறு ஆரோக்கியமான வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கிறது என்பது குறித்து பேசினார். உதவிப் பேராசிரியர் டாக்டர். ஸ்ரீநிவாஸ்,யோகா குறித்து செயல் விளக்கத்துடன் பள்ளி மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவத்தை விளக்கினார். NSS மாணவ தன்னார்வலர்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வர்ணம் பூசினார்கள்.

குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டிகள்.

என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நிகழ்ச்சியின் ஐந்தாம் நாள் (20ம் தேதி) தட்டாங்குட்டை கிராமத்தில் மரம் நடும் திட்டத்தை பேராசிரியர் டாக்டர். ராஜ்கபூர் துவக்கி வைத்தார். தட்டாங்குட்டை கிராமத்தில் அலங்கார மரங்கள், நிழல் தரும் மரங்கள் மற்றும் பலன் தரும் மரங்கள் என பல்வேறு வகையான 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஆறாம் நாள் (21ம் தேதி) அன்று, "பொது சுகாதாரத்தில் மருந்தாளுனரின் பங்கு" என்ற தலைப்பில் பேராசிரியர் டாக்டர்.வெங்கடேஸ்வரமூர்த்தி, தட்டான்குட்டை கிராம ஊராட்சி பொதுமக்கள் மத்தியில் பேசினார். இணைப் பேராசிரியர் டாக்டர். காமேஸ்வரன் "மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாடு" என்ற தலைப்பில் பேசினார்.

நிகழ்ச்சியின் ஏழாவது நாளில் (22ம் தேதி), N. வெங்கடேஸ்வரன், தட்டாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு "வடிவமைப்பு சிந்தனை" என்ற தலைப்பில் பேசினார். அன்று தட்டான்குட்டை கிராம தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு.விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

என்.எஸ்.எஸ். முகாமில் கலந்து கொண்ட ஜே.கே.கே.என் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள்.

அன்று மதியம் 1.00 மணிக்கு என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நிறைவு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக தட்டாங்குட்டை கிராம ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பா கலந்து கொண்டார். டாக்டர்.என்.வெங்கடேஸ்வரமூர்த்தி, டாக்டர்.சி.கண்ணன் ஆகியோர் என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடத்த ஒத்துழைப்புக்கொடுத்தமைக்கு வாழ்த்து தெரிவித்தனர். என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் டாக்டர் வி.கிஷோர் குமார் 7 நாட்கள் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு பாராட்டு தெரிவித்தார். என்.எஸ்.எஸ் தன்னார்வலர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் டாக்டர் சி.கண்ணன் நன்றி கூறினார்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு