JKKN ஸ்ரீ சக்திமயில் நர்சிங் கல்லூரியில் தேசிய தடுப்பூசி தினம் அனுசரிப்பு
சான்றிதழ் பெரும் மாணவி ஒருவர்.
தேசிய தடுப்பூசி தின நிகழ்ச்சியில் ஸ்ரீ JKKN சக்திமயில் நர்சிங் கல்ல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தடுப்பூசி தினம் எப்படி வந்தது? அது தேசிய தடுப்பூசி தினமாக எப்போது அறிவிக்கப்பட்டது போன்ற கருத்துகள் மாணவ மாணவியர்களுக்கு நர்சிங் கல்லூரி பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர்.
பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்.தனசேகரன் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தடுப்பூசியின் அவசியம், அதன் தேவை, எதிர்கால வளர்ச்சி போன்றவை குறித்து மாணவ மாணவிகள் மத்தியில் விரிவாகப் பேசினார்.
தேசிய தடுப்பூசி தினம் ஆண்டுதோறும் மார்ச் 16ம் தேதி அனுசரிக்கப்படுக்கிறது. 1995ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி, இந்தியாவில் போலியோ நோயிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான முதல் வாய்வழி தடுப்பூசி செலுத்தப்பட்ட நாள் இதுவாகும்.
இதையொட்டியே இந்த நாளை தடுப்பூசிக்கு எதிரான மனநிலையை மாற்றுவதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த நாளை தடுப்பூசி விழிப்புணர்வு தினமாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், களத்தில் இறங்கி பணியாற்றும் சுகாதார ஊழியர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் இந்த தேசிய தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்படுக்கிறது.
வாய்வழி போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் வழக்கத்திற்கு பிறகு தடுப்பூசி மீதான அச்சமும் மக்களிடயே விலகியது எனலாம். தடுப்பூசி பயன்பாடு அதிகரித்ததால், இந்தியா சுகாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தைப் பெற்றது என்பதற்கு, இந்த தலைமுறையினரும் அவர்களின் உடல்நலனுமே சாட்சி. தற்போது கொரோனா பரவலின் போதும் தடுப்பூசி பயன்பாடே நம்மை நோயிலிருந்து காத்துவந்தது என்பது குறிப்பிடப்படவேண்டிய முக்கிய கருத்தாகும்.
இன்றும்கூட தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் நோய்கள் பல உள்ளன. உதாரணத்துக்கு எய்ட்ஸ், மலேரியா, டெங்கு போன்றவற்றை சொல்லலாம். அவற்றை கண்டுபிடிப்பதே தற்போது மருத்துவத்துறையின் அடுத்த இலக்காக, அடுத்தகட்ட வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. விரைவில் அதுவும் கிடைக்குமென நம்பலாம்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu