JKKN மருந்தியல் கல்லூரி சார்பில் தேசிய மருந்தக வார விழா பேரணி..!

JKKN மருந்தியல் கல்லூரி சார்பில் தேசிய மருந்தக வார விழா பேரணி..!
X

JKKN பார்மசி கல்லூரி சார்பில் மருந்தக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தேசிய மருந்தக வார விழாவையொட்டி JKKN மருந்தியல் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

61வது தேசிய மருந்தக வார விழாவை முன்னிட்டு குமாரபாளையம் JKKN மருந்தியல் கல்லூரி மற்றும் பவானி-குமாரபாளையம் இந்திய மருந்தியல் சங்கம் கிளைகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ரவி., உதவி காவல் ஆய்வாளர் மலர்விழி மற்றும் JKKN மருந்தியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.செந்தில் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ரவி, உதவி காவல் ஆய்வாளர் மலர்விழி மற்றும் JKKN மருந்தியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.செந்தில் ஆகியோர்.

குமாரபாளையம், காவல் நிலையம் முன்பு துவங்கிய இந்த பேரணியானது, பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர்பிரிவு, வழியாக ராஜம் தியேட்டர் சந்திப்பில் முடிவுற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியின் நோக்கம் முறையான மற்றும் பாதுகாப்பான மருந்துகளை பயன்படுத்தி உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதாகும்.

மேலும் பேரணியில் மாணவ, மாணவிகள் பொது சுகாதாரத்தை முறையாக பின்பற்றவேண்டும், மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறால் உட்கொள்ள வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பினர்.


இந்தப்பேரணியில் சுமார் 250 மாணவ, மாணவிகள், ஐபிஏ பவானி-குமாரபாளையம் உள்ளூர் கிளையின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், JKKN மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர்.கிஷோர்குமார், ஆசிரிய உறுப்பினர்கள், பவானி-குமாரபாளையம் உள்ளூர் கிளை இந்திய மருந்தியல் சங்கம் செயலாளர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தேசிய மருந்தக வாரம் என்றால் என்ன?

தேசிய மருந்தக வாரம் அக்டோபர் மாதத்தின் மூன்றாவது முழு வாரத்தில் அனுசரிக்கப்படுகிறது. மேலும் மருந்தாளுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நோயாளிகளின் பராமரிப்புக்கு செய்யும் விலைமதிப்பற்ற பங்களிப்பை இந்த நாட்கள் அங்கீகரின்றன. உலக சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு மருந்தாளுனர்களின் பங்களிப்பை அவர்களின் தொழில் மூலம் ஊக்குவிப்பது இந்த நாளின் முக்கிய குறிக்கோள்.


உலக மருந்தாளுநர் தினம்

1912 ம் ஆண்டு இந்த நாளில் சர்வதேச மருந்தியல் கூட்டமைப்பு நிறுவப்பட்டதால், செப்டம்பர் 25 ஆம் தேதி உலக மருந்தாளுநர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது.

முதல் மருந்தாளுநர்

முதல் பார்மகோபியா, டி மெட்டீரியா மெடிகா 600 மருந்துகளின் பட்டியல் மற்றும் பொருட்களை எவ்வாறு பெறுவது மற்றும் தயாரிப்பது என்பதை கி.பி. 50 இல் டியோஸ்கோரைட்ஸ் என்பவரால் கூறப்பட்டது. இவரும் முதல் மருந்தாளுநர் ஆனார். மேலும் "மருந்தகத்தின் தந்தை" என்று அழைக்கப்பட்ட மற்றொருவர் ஆயுதமேந்திய போராளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்த நிபுணர் கிரேக்கரான கிளாடியஸ் கேலனஸ் ஆவார்.

மருந்தகத்தின் தாய் யார்?

எலிசபெத் கூக்கிங் கிரீன்லீஃப் அமெரிக்காவின் முதல் பெண் மருந்தாளுநராக அங்கீகரிக்கப்பட்டவர். அவர் பன்னிரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்ததோடு மட்டுமல்லாமல், மருந்தகத்தின் தாயாகவும் கருதப்படுகிறார். எலிசபெத் தனது சொந்த மருந்துக் கடையை 1727 ம் ஆண்டில் பாஸ்டனில் திறந்தார்.

மருந்தகக் கொடிகள் ஏன் சிவப்பு நிறத்தில் உள்ளன?

சிவப்புக் கொடியானது துஷ்பிரயோகம் அல்லது தவறாகப் பயன்படுத்துதல், இணக்கம், போதைப்பொருள் தொடர்புகள் அல்லது "போலி அல்லது மாற்றப்பட்ட மருந்து" ஆகியவற்றைக் குறிக்கலாம். இதுபோன்ற சிக்கல்கள் "எந்தவொரு மருந்துச்சீட்டையும் நிரப்புவதற்கு முன்" ஒரு மருந்தாளரால் மதிப்பாய்வு செய்யப்பட்டு தீர்க்கப்படும். "எதிர்கால மருந்து பயன்பாட்டு மதிப்பாய்வின்" ஒரு பகுதியாக, ஒரு சாட்சியமாக அது நிற்கிறது.

Tags

Next Story
மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்