JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி சார்பில் பட்ஜெட் விவாத கருத்தரங்கு

JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி சார்பில் பட்ஜெட் விவாத கருத்தரங்கு
X
Namakkal news today-JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி சார்பில் தேசிய அளவிலான ஒருநாள் பட்ஜெட் விவாத கருத்தரங்கம் நடைபெற்றது.

Namakkal news today- குமாரபாளையம், JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி சார்பில் "2022-2023 ஆண்டுக்கான பட்ஜெட் விவாதம் குறித்த தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு" செந்தூர்ராஜா ஹாலில் நடந்தது.

பட்ஜெட் விவாத கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவ,மாணவிகள்.

JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை மற்றும் இயக்குநர் ஓம்சரவணா ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி சார்பில், முதல்வர் டாக்டர்.தமிழரசு கருத்தரங்குக்கு முன்னிலை வகித்தார்.

பட்ஜெட் விவாத கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள்.

Namakkal news today- தேசிய நிதிக் கல்வி மையத்தைச் சேர்ந்த முனைவர்.பிரபாகரன், Resource Person -ஆக கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் பட்ஜெட் குறித்த விளக்கங்களை மாணவர்களுக்கு அளித்தார். அதில் திட்டமிடல், நிதி ஒதுக்கீடு, திட்ட செயல்பாடு போன்றவைகளை சிறப்பாக விளக்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பணத்தை முதலீடு செய்யும் முறை குறித்தும், பொருளாதார நிலை குறித்தும் மாணவர்கள் விளக்கமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பட்ஜெட் விவாத கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவிகள்.

JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மேலாண்மை ஆய்வுகள் துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து