JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தபோது இயக்குனர் ஓம் சரவணாவுடன் நிறுவன அதிகாரிகள்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நான்கு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ரூபன் தேவ பிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வில் சென்னையில் உள்ள Connect Infosystems நிறுவனத்தின் மேலாளரும் மற்றும் நிறுவனருமான செல்வகுமார், கோயம்புத்தூரில் உள்ள New Technology நிறுவனத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார், நாமக்கல்லில் உள்ள S.B.M. Software Solutions நிறுவனத்தின் இயக்குநர் தஸ்லிம் பானு, மற்றும் கன்னியாகுமரியில் உள்ள Effyies Smart Technology நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி. இ. ஓ அக்ஷா உள்ளிட்டோர் நிர்வாக இயக்குநர் ஓம்சரவணா முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் சென்னை Connect Infosystems-ன் நிறுவனர் செல்வகுமார் பேசும்போது அவரது பேச்சு மாணவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் இருந்தது. மேலும் அவர் தனது நிறுவனத்தின் மூலமாக மாணவர்களுக்கு மென்பொருள் சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் Effyies Smart Technology-நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி. இ. ஓ. அக்ஷா, செயற்கை தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்த ஒப்பந்தமானது மாணவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் அவர்களின் வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் இருக்கும் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து New Technology நிறுவனத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் மற்றும் அபுதாகிர் ஆகியோர் தங்களது நிறுவனத்தின் மூலம் மாணவர்களின் திறன்களை வளர்க்கும் வகையிலான பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஒப்பந்தமானது வரும் காலங்களில் மாணவர்களின் வேலை வாய்ப்பினை அதிகரிக்க உதவியாக இருக்கும் என்றார்கள்.
விழாவில், கல்வி நிறுவனத்தின் அனைத்துத் துறை உயர் அதிகாரிகள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu