Mei Ezhuthukal in Tamil-மெய் எழுத்து என்பது என்ன? அறிவோம் வாங்க..!

Mei Ezhuthukal in Tamil-மெய் எழுத்து என்பது என்ன? அறிவோம் வாங்க..!
X

mei ezhuthukal in tamil-மெய் எழுத்துகள் 

தமிழில் உயிர் எழுத்துக்களைப் போலவே மெய் எழுத்துக்களும் முக்கியமானவை ஆகும். ஏனெனில் உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்தால்தான் உயிர்மெய் எழுத்து பிறக்கும்.

Mei Ezhuthukal in Tamil

தமிழில் உயிர் எழுத்துக்கள் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவு மெய் எழுத்துக்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமிழ் மொழிக்கு உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் அடிப்படையான எழுத்துக்கள். க் முதல் ன் வரை உள்ள 18 எழுத்துக்களும் மெய் எழுத்துக்கள் ஆகும்.

Mei Ezhuthukal in Tamil

மெய் எழுத்துக்களை ஒலிப்பது சற்று கடினம். மெய்யெழுத்துக்களில் சில எழுத்துக்கள் ஒரே ஒலி வருவது போல இருக்கும். ஆனால் அவற்றின் ஒலி மாறுபாடு இருக்கும், உச்சரிக்கும் போது கவனமாக உச்சரிக்க வேண்டும். மெய்யெழுத்துக்கள் உயிர் எழுத்துக்களுடன் சேர்ந்தே இயங்கும். மெய்யெழுத்துக்களை ஒற்றெழுத்துக்கள் என்றும் புள்ளிய எழுத்துக்கள் என்றும் கூறுவர்.

உயிர் எழுத்துக்களில் இருக்கும் குறில் நெடில் வேறுபாடு மெய் எழுத்துக்களில் இருக்காது.

மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். அவை

வல்லினம்

மெல்லினம்

இடையினம்

Mei Ezhuthukal in Tamil

வல்லினம்

மெய் எழுத்துக்களில் வன்மையாக ஒலிக்கும் எழுத்துக்களை வல்லின எழுத்துக்கள் என்று கூறுவர்.

க், ச், ட், த், ப், ற்

இந்த ஆறு மெய் எழுத்துக்களும் வல்லின எழுத்துகள் ஆகும்

மெல்லினம்

மெய் எழுத்துக்களில் மென்மையாக ஒலிக்கும் எழுத்துக்களை மெல்லின எழுத்துக்கள் என்று கூறுவர்.

ங், ஞ், ண், ந், ம், ன்

ஆகிய ஆறு மெய்யெழுத்துக்களும் மென்மையாக ஒலிப்பதால் மெல்லின எழுத்துகள் ஆகும்.

Mei Ezhuthukal in Tamil

இடையினம்

மெய் எழுத்துக்களில் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிக்கும் எழுத்துக்களை இடையின எழுத்துக்கள் என்று கூறுவர்.

ய், ர், ல், வ், ழ், ள்

ஆகிய ஆறு மெய் எழுத்துக்களும் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிப்பதால் இடையின எழுத்துகள் ஆகும்

Mei Ezhuthukal in Tamil

எழுத்து குறித்த நன்னூல் பாடல்

புள்ளிவிட்டு அவ்வொடு முன்உரு ஆகியும்

ஏனை உயிரொடு உருவு திரிந்தும்

உயிர் அளபாய் அதன்வடிவு ஒழிந்து இருவயின்

பெயரொடும் ஒற்று முன்னாய் வரும் உயிர்மெய் “

நன்னூல் -89

மெய் எழுத்துக்களில் உருவாகும் சொற்கள் சில கீழே தரப்பட்டுள்ளன

க் கொக்கு

ங் சங்கு

ச் தச்சர்

ஞ் பஞ்சு

ட் சட்டம்

ண் நண்டு

த் வாத்து

ந் சந்தை

ப் பருப்பு

ம் அம்மா

ய் காய்

ர் உயிர்

ல் வயல்

வ் செவ்வாய்

ழ் வாழ்க்கை

ள் தள்ளுவண்டி

ற் காற்று

ன் மான்

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!