ஈரோட்டில் JKKN நர்சிங் மாணவர்கள் சார்பில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோட்டில் JKKN நர்சிங் மாணவர்கள் சார்பில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நடந்த மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் JKKN நர்சிங் மாணவர்கள் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 25ம் தேதி அன்று, மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மாணவிகளின் விழிப்புணர்வு நடனம்.

இந்நிகழ்வில் தலைமை மருத்துவர், மருத்துவர்கள்,செவிலியர்கள், மருத்துவ துப்புறவு தொழிலாளர்கள் மற்றும் B.Sc., 2ம் ஆண்டு நர்சிங் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். தலைமை மருத்துவரின் வரவேற்புரையுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது. மலேரியா காய்ச்சல் பரவாமல் எப்படி தடுப்பது என்பது குறித்து தலைமை மருத்துவர் பேசினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற JKKN நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள்.

2 ஆம் ஆண்டு நர்சிங் மாணவ, மாணவியர்கள் மலேரியா காய்ச்சல் பரவும் முறை மற்றும் தடுப்பது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு நாடகத்தின் வாயிலாக விளக்கினார்கள். இந்த விழிப்புணர்வு நாடகத்தை காண ஈரோடு தலைமை ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த பலரும் பார்த்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil