படிப்புக்காக உங்கள் உயிருடன் விளையாடாதீர், மாணவர்களே..!

படிப்புக்காக உங்கள் உயிருடன் விளையாடாதீர், மாணவர்களே..!
X

Lucknow Class 10 Student-தேர்வுக்கு படிக்கும் மாணவி (கோப்பு படம்)

படிப்பு முக்கியம்தான். அதற்காக உங்கள் உயிருடன் விளையாடாதீர்கள். உடல் அயர்ச்சியடையும்போது தூக்கம் மட்டுமே புத்துணர்வைத் தரும்.

Lucknow Class 10 Student,Board Exams,Brain Surgery,Drug Overdose,Anti-Sleep Medicine,Nerves Swell,Hospital,CBSE Board Exams,Altered Sleep Cycle

மாணவ சமூகமே சிந்தியுங்கள். படிக்கவேண்டும் என்பதற்காக தவறான முறைகளை கையாளக்கூடாது. தூக்கம் மட்டுமே மனிதனை விழிப்புடன் வைத்திருக்க இயற்கை அளித்த கொடை. நன்றாக தூங்கி எழுந்தால் மட்டுமே தெளிவான மனதுடன் படிக்கமுடியும். தெளிவான சிந்தனை பிறக்கும்.

Lucknow Class 10 Student

அதனால் படிக்கவேண்டும் என்பதற்காக தவறான வழிகளை பின்பற்றாதீர்கள்.

கல்வி அவசியம் - ஆனால் உயிர் அதைவிட முக்கியம்

லக்னோவைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ஒரு மாலை நேரத்தில் மயக்கமடைந்து விழுந்தார். அடுத்து, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டுக்காக அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். நீண்ட காலமாக அந்த மாணவி "தூக்க எதிர்ப்பு" மருந்துகளை உட்கொண்டு வந்ததால், அவரது நரம்புகள் பாதிக்கப்பட்டு, படுக்கையில் விழும் நிலை ஏற்பட்டது.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் மாணவர்கள், பெறோர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகத்தின் மூலம் மாணவர்கள் அனைவரும் ஒரு வாழ்க்கை பாடம் கற்க வேண்டும்.

Lucknow Class 10 Student

கல்வியின் மீதான அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சனைகள்

இன்றைய போட்டி நிறைந்த உலகில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும் என்பதுடன் சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்கவேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்த அழுத்தம் மாணவர்களை தவறான பாதைகளுக்கு இட்டுச் செல்வதும் உண்டு. அதனால் அவர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தத் தூண்டுகிறது.

சரியான வழிகாட்டுதல் இன்றியமையாதது

முறையான உணவு, உடற்பயிற்சி, போதுமான தூக்கம் போன்ற நல்வாழ்வின் அடிப்படைகளை பின்பற்றுவதின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்குப் பெறோரும் ஆசிரியர்களும் அடிக்கடி நினைவூட்ட வேண்டும். மன அழுத்தம் இருப்பதை உணர்ந்தால் தயக்கமின்றி உதவி நாட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்த வேண்டும்.

Lucknow Class 10 Student

சுய மதிப்பீடு செய்யுங்கள்

சுய மதிப்பீடு என்பது உங்களைப்பற்றி நீங்களே அறிந்துகொள்ளும் ஒரு சுய பரிசோதனை. உங்கள் அறிவு நிலை, உங்கள் உடல்நிலை, உங்களால் எவ்வளவு மதிப்பெண் பெறமுடியும்? அதற்கு எவ்வளவு நேரம் படிக்கவேண்டும்? எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்கவேண்டும்? எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதையெல்லாம் உங்கள் ஆசிரியர் மற்றும் பெற்றோருடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கலாம்.

இதில் உங்கள் அறிவு நிலை மற்றும் உங்கள் உடல்நிலை இரண்டு மட்டும் உங்களின் தனிப்பட்ட தேர்வாக இருக்கவேண்டும். அதை நீங்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும்.

Lucknow Class 10 Student

உயிர் இருந்தால் தான் கல்வி

கல்வி நிச்சயமாக முக்கியம், ஆனால் உயிரை விட அல்ல. ஒவ்வொரு மாணவரும் தங்கள் கனவுகளை அடைய பாடுபடுவதோடு, தங்கள் சுகாதாரத்தையும் முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும். லக்னோ மாணவியின் துரதிர்ஷ்டவசமான கதை நமக்கு நினைவூட்டுவதாக அமையட்டும் - ஆரோக்கியமான உடலும் மனமும் இல்லாமல், கல்வியால் எந்த உச்சத்தையும் தொட முடியாது.

Tags

Next Story