/* */

கற்றல்-கற்பித்தல் பணி முடக்கம்-TNTA மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் தகவல்

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் விரைவில் பள்ளிகளை திறக்கவேண்டும் என T.N.T.A மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

கற்றல்-கற்பித்தல் பணி முடக்கம்-TNTA மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் தகவல்
X

T.N.T.A மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் 

கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதால் விரைவில் பள்ளிகளை திறக்கவேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்..

கடந்த மார்ச் 2020 முதல் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு 2021 சிலநாட்கள் மட்டும் 10,12 ஆம் வகுப்பு மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களை பள்ளிகளுக்கு வரச்சொல்லவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கற்றல்-கற்பித்தல் பணி முடக்கத்தில் உள்ளது.

கல்வித்தொலைகாட்சி - இணையவழி கல்வியென்பது ஒருவழிப்பயிற்சியாகும் அது முழுமையாகப் பயன்தராது. கொரோனா பெருந்தொற்று தமிழ்நாட்டில் 36 ஆயிரத்தைக் கடந்த நிலையில் தமிழக முதல்வர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் 95 % சதவீதம் குறைத்தது தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பாராட்டி வரவேற்கின்றோம்.

மக்கள் வாழ்க்கையும் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறது. அனைத்துசெயல்களும் நடைமுறைக்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆகையால் மாணவர்களின் நலன்கருதி கல்வி முடங்கிப்போயிருப்பதால் கற்றல் பணியினை தொடங்கப் பள்ளிகளை திறக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகிறேன். குறிப்பாக தொடக்கக்கல்வி மாணவர்கள் எழுத்துகளே மறந்துபோகும் நிலை உருவாகியுள்ளது.

உயர்,மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறைந்துள்ளதை அறியமுடிகின்றது. எனவே முற்றிலுமாக கொரோனா தொற்று குறையாதக் காரணத்தினால் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை தினந்தோறும் 5 பாடவேளைகளுடனும் 1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை சுழற்சி முறையிலும் பள்ளிகள் இயங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும். மேலும் பள்ளிகள் திறந்தவுடன் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனைகளை பெற்றோர்களுக்கு வழங்கிடவேண்டும்.

மாணவர்கள் நெடுங்காலம் கற்றல் தொடர்பில்லாமல் இருந்துவருவதால் முதல் ஒரு வாரம் மாணவர்களுடன் ஆசிரியர்கள் கலந்துரையாடி மனரீதியாகக் கற்றல் சூழலுக்கு கொண்டுவந்தபிறகு பாடங்களை நடத்த அறிவுறுத்தவேண்டும். தேவையான அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பாதுகாப்பு உபகரணங்கள் சானிடைசர், சோப்பு உள்ளிட்டவைகளுடன் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்துமாத்திரைகள் வழங்கிடவேண்டும். தற்போதையச்சூழலில் கல்வியின் தேவையறிந்து மாணவர்களின் நலன்கருதி பள்ளிகளை விரைவில் திறக்க முயற்சி செய்ய வேண்டி தமிழக முதல்வரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Updated On: 16 July 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...