JKKN பல் மருத்துவக்கல்லூரியில் 'லேமினேட் வெனியர்ஸ் நிகழ்ச்சி' : சிறப்பான ஏற்பாடு..!
JKKN பல் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற 'அலுயூரிங் லேமினேட்ஸ்' என்ற சிடிஇ நிகழ்ச்சியை இயக்குனர் ஓம் சரவணா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
Laminate veneers CDE program-JKKN பல் மருத்துவக் கல்லூரியில், புரோஸ்டோடோன்டிக்ஸ் துறை சார்பில் சிஆர்ஐ மாணவர்கள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு 'அலுயூரிங் லேமினேட்ஸ்' என்ற தலைப்பில் சிடிஇ நிகழ்ச்சி நடைபெற்றது.
.பல் மருத்துவக் கல்லூரி கருத்தரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா வரவேற்றுப்பேசினார். தலைமை விருந்தினராக டாக்டர். சந்திரமௌலி கலந்து கொண்டார்.
டாக்டர்.சந்திரமௌலி ஜி.சி. நிறுவனத்தில் பிரபல பேச்சாளராக இருப்பவர். அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு லேமினேட் வெனியர்களில் மிகச் சிறப்பான விரிவுரையை வழங்கினார். கிளினிக்கில் லேமினேட் முறைகளை மிகவும் எளிமையான முறையில் செய்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.
அனைத்து CRI மாணவர்கள், முதுகலை மாணவர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு சிறப்பான கற்றல் வழியாக அவரது விரிவுரை அமைந்தது. Prosthodontics துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கான முயற்சியை நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா பாராட்டினார்.
மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகள் GC நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. புரோஸ்டோன்டிக்ஸ் துறைத் தலைவரும், பேராசிரியருமான டாக்டர்.சி.தினேஷ்குமார், துறை பணியாளர்களை குழுவாக அமைத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நன்றியுரையுடன் மாலை 3.30 மணிக்கு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu