கடையெழு வள்ளல்கள் யார் தெரியுமா? என்னதான் செஞ்சாங்க..? தெரிஞ்சுக்கங்க..!

கடையெழு வள்ளல்கள் யார் தெரியுமா? என்னதான் செஞ்சாங்க..? தெரிஞ்சுக்கங்க..!
X

kadai ezhu vallalgal-கடையெழு வள்ளல்கள் (கோப்பு படம்)

Kadai Elu Vallalgal History in Tamil-வள்ளல் பரம்பரை என்று இன்று சிலரை கிண்டலாகக் குறிப்பிடுவது உண்டு. ஆனால், வள்ளல் என்பவர் சுயநலம் இல்லாதவர். தனெக்கென வாழாதவர் என்று பொருள் கொள்ளலாம்.

Kadai Elu Vallalgal History in Tamil-வள்ளல் என்போர் தமக்கென எதையும் சிந்திக்காமல் பிறரின் நலன்குறித்து சிந்திப்பதே ஆகும். தன்னிடம் இருக்கும் பொன்னோ,பொருளோ ஏதுவாகிலும் சிறிதும் யோசிக்காமல் அள்ளிக்கொடுப்பதே வள்ளல் குணம். அப்படி வாழ்ந்த வள்ளல்களில் பேகன்,பாரி,காரி,ஆய்,அதிகன்,நள்ளி,ஓரி ஆகிய ஏழு வள்ளல்கள் பண்டைய தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டவர்கள். அவர்கள் செய்த கொடையை இந்நாளில் நல்லியக் கோடன் ஒருவனே செய்கிறான் என்று சிறுபாணாற்றுப்படையில் கடையெழு வள்ளல்களின் பெருமையை குறிப்பிடப்பட்டுள்ளது.

1. பேகன்

இவன் பழனி மலை பகுதியில் வாழும் ஆவியர் குடியைச் சேர்ந்த மக்களின் தலைவன் .மழை பொழியும் மலை சாரல் பாதையில் சென்றுக் கொண்டு இருந்தபோது கருமேகங்களைக் கண்டு ஆடி கொண்டிருந்த மயில் ,குளிரில் நடுங்குவதாக எண்ணி தன் போர்வையை அதன் மீது போர்த்தி விட்டவன். இதனால் இவனை மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் பேகன் என அழைக்கப்பட்டான் .

2. பாரி

இவன் பறம்பு மலை பகுதியை ஆண்ட மன்னன் .இவன் பறம்பு மலை பகுதியைச் சேர்ந்த நாகமலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பொழுது படர்வதுக்கு பற்றுக் கோடு இல்லாமல் ஆடி கொண்டிருந்த முல்லைக் கொடி படர்வதற்காகத் தன் தேரையே கொடியருகில் நிறுத்தி விட்டுச் சென்றவன். ஆகவே இவனை முல்லைக்குத் தேர் ஈந்த பாரி என பெயர் பெற்றான். அவ்வையார் கூட இந்த வள்ளலை பாராட்டி சங்கப் பாடலொன்று பாடியுள்ளார்.

3. காரி

இம்மன்னன் தன் கையில் உள்ள வாள் வீச்சில் பகைவர்களை வெட்டிவீழ்த்துவதைப் பொழுதுப் போக்காக கொண்டிருந்தான் அதனால் இவன் வாள் என்றும் செந்நிறம் கொண்டு ஒளிரும் ஆனால் இவனோ தன்னைத் தேடி வந்து கேட்டவர்களுக்கு வெண் மயிர் பிடரிக் குதிரைகளை ப் பரிசாக வழங்கினான் அப்போது அவன் பேசும் அன்பு மொழிகள் விதை முளைக்க உதவும் ஈர நிலம் போன்றவை வேல் சிவப்பில் வீரமும் ,கைசிவப்பில் ஈரமும் கொண்டவன் என்று நல்லூர் நத்தத்தனார் சிருபாணாற்றுப் படையில் பாடியுள்ளார் .

4. ஆய்

இவன் பொதிகை மலைப் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளையும் நிலப்பகுதிகளையும் ஆண்டு வந்த குறுநில மன்னன். இவன் மகிழ்ந்திருக்கும் போது மார்பில் சந்தனம் பூசிய கோலத்தோடு காட்சித் தருவான் சினந்திருக்கும் போது வில்லும் அம்பும் கையுமாக திரிபவன். எவருக்கும் கிடைத்தற்கரிய நீல நாகத்தின் உடையை குற்றாலத்தில் உள்ள தென்முகக்கடவுள் சிலை ஆடை இல்லாமலிருப்பதைக் கண்டு அச் சிலைக்கு போர்த்தி மகிழ்ந்தான் . மேலும் பொருள் வேண்டி வருவோர்க்கு இல்லை எனாது பொருள் வழங்கினான் .இவனைத் திண் தோள் ஆர்வ நன்மொழி ஆய் ! எனப் போற்றினர் .

Kadai Elu Vallalgal History in Tamil

5.அதியமான்

தகடூர் நாட்டை ஆண்டுவந்தவன் அதியமான் ,இவன் தன் ஆட்சிக் காலத்தின் பெரும் பகுதியை போரிலேயே கழித்துள்ளான் என்பதை இவன் வரலாற்றைப் படித்தால் விளங்கும் . வேல் வீச்சில் இவனை வெல்ல யாரும் கிடையாது பெரும் சினக்காரன் . பூஞ்சாரல் மழைப் பகுதியில் பழுத்திருந்த அரிய நெல்லிக்கனி ஒன்று இவனுக்குக் கிடைத்தது. அது சாவமையைத் தரும் அமுதம் போன்றது. அதனைத் தான் உண்ணாமல் அவ்வைக்குக் கொடுத்து நீண்ட நாள் உயிர் வாழச் செய்தான். இதனால் அவ்வைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் என எல்லோராலும் போற்றப்பட்டான்.

படம் : விக்கி மூலம் -நன்றி

6. நள்ளி

இவன் நெடுங்கோடு மலை முகடு என்கின்ற மலைப்பகுதி தற்போது உதகை என்று அழைக்கப்படுகிறது .இந்த மலைப்பகுதியின் தலைவன் இவன் போர் முனையில் எப்படி கைகள் முன்னால் நிற்குமோ அதுபோல் மலை வள மக்களின் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் வழங்கிப் புகழ்பெற்றவன்.

7.ஓரி

மலை நாட்டைச் சேர்ந்த வல் வில் ஓரி போர்முனையில் வெற்றி பெற்று புகழுடன் விளங்கியவன் காரி குதிரையில் வந்து போரிட்ட போது அவனைப் போரில் வென்று முடிவில் காரியின் குறும் பறை நாட்டைத் தனது போர் வெற்றியினைப் புகழ்ந்து பாடிய யாழ் மீட்டும் பாணர்களுக்குப் பரிசாக வழங்கி பெரும் வள்ளல் எனப் போற்றப்பட்டான்.

Kadai Elu Vallalgal History in Tamil

மண்ணில் எத்தனையோ பேர் வள்ளல்களாக வாழ்ந்து மறைந்திருந்தாலும் இன்றளவும் கடையேழு வள்ளல்கள் என நாம் இவர்களை மதிக்கிறோம் என்றால் அதற்கு அவ்வள்ளல்களிடம் இருந்த சிறந்த பண்புளான அஃறிணை உயிர்களிடத்தும் அன்பு கொள்தல், கலைஞரைப் போற்றுதல்,இரவலரை ஓம்புதல் போன்ற நற்பண்புகளே காரணமாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!