JKKN நர்சிங் மாணவர்களுக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் 'தொழுநோய்' பாடம்

JKKN நர்சிங் மாணவர்களுக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் தொழுநோய் பாடம்
X

ஈரோடு அரசு மருத்துவமனையில் தொழுநோய் குறித்த பயிற்சி எடுத்தபோது.

JKKN நர்சிங் மாணவர்கள், ஈரோடு அரசு மருத்துவமனையில் தொழுநோய் பற்றிய பாடம் கற்கச் சென்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாராபாளையம், JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு செவிலியர் மாணவ ,மாணவிகள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, தொழுநோய் ஒழிப்பு மையத்திற்கு தொழுநோய் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள சென்றனர்.

ஈரோடு தலைமை மருத்துவமனை துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன், ஹெல்த் இன்ஸ்பெக்டர் பழனிசாமி , சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம், மருத்துவ ஆய்வாளர் சேகர் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தொழுநோய் உண்டாவது எதனால், அதை தடுப்பது எப்படி, அதற்கான மருத்டுவ சிகிச்சைகள், தொழு நோயாளிகளை கையாளும் முறை போன்ற கருத்துக்களை மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர் .

சுகாதார ஆய்வாளர் பழனிசாமி தொழுநோய்க்கான சிகிச்சை முறைகளை விளக்கினார். சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம் தொழுநோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு நோயாளிகளின் புகைப்படங்களை மாணவ, மாணவிகளுக்கு காண்பித்து நோயின் தீவிர நிலை, முதல் நிலை போன்றவைகளை விளக்கினார். இறுதியாக மருத்துவ ஆய்வாளர் சேகர் நன்றி கூறினார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா