ஈரோடு ஜிஎச் ஏற்பாடு செய்த தடுப்பூசி முகாமில் JKKN நர்சிங் மாணவர்கள் பங்கெடுப்பு

ஈரோடு ஜிஎச் ஏற்பாடு செய்த தடுப்பூசி முகாமில் JKKN நர்சிங் மாணவர்கள் பங்கெடுப்பு
X

பொதுமக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் JKKN நர்சிங் மாணவிகள்.

ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரி ஏற்பாடு செய்த தடுப்பூசி முகாமில் JKKN நர்சிங் மாணவர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஏப்ரல் 30ம் தேதி அன்று கோவிட்-19 தடுப்பூசி முகாம் நடந்தது.

குமாரபாளையம்,JKKN ஸ்ரீ சக்திமயில் நர்சிங் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் மாணவ.மாணவிகளும் இந்த தடுப்பூசி முகாமில் பங்கெடுத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

தடுப்பூசி செலுத்தும் JKKN நர்சிங் மாணவிகள்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த இந்த தடுப்பூசி முகாமில், மருத்துவக் கண்காணிப்பாளர், இணை இயக்குநர்கள் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் மற்றும் பிற தனியார் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முகாமை மருத்துவ கண்காணிப்பாளர், இணை இயக்குனர்கள் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர்கள் துவக்கி வைத்தனர்.

தடுப்பூசி செலுத்தும் JKKN நர்சிங் மாணவிகள்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள PHC, ரயில் நிலையம் மற்றும் அங்கன்வாடி ஆகிய இடங்களில் ஸ்ரீ சக்திமயில் இன்ஸ்டிடியூட் ஆஃப் நர்சிங் அண்ட் ரிசர்ச் மாணவர்கள் இந்த தடுப்பூசி முகாமில் பங்கெடுத்து பொது மக்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!