JKKN நர்சிங் மாணவ,மாணவிகள் கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்பு

JKKN நர்சிங் மாணவ,மாணவிகள் கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்பு
X

கொரோனா தடுப்பூசி செலுத்திய JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரி மாணவிகள்.

கொரோனா தடுப்பூசி முகாமில் JKKN நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

நாமக்கல் மாவட்டம், DDHS எலந்தக்குட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 8 ம் தேதி அன்று கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நடந்தது.

இம்முகாமில் குமாரபாளையம், ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவ,மாணவிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இம்முகாமை மருத்துவகண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரி மாணவ ,மாணவிகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மரக்கல்காடு, குமாரபாளையம்,பள்ளிபாளையம், காடைச்சநல்லூர்,கொக்கராயன்பேட்டை ஆகிய ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு சென்று பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தினர். JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரி மாணவ , மாணவிகள் மூலம் மொத்தம் 200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி முகாம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

Tags

Next Story
ai in future agriculture