JKKN நர்சிங் கல்லூரிக்கு உலக சுகாதார தின நிகழ்ச்சியில் சாம்பியன்ஷிப்

JKKN நர்சிங் கல்லூரிக்கு உலக சுகாதார தின நிகழ்ச்சியில் சாம்பியன்ஷிப்
X

சாம்பியன் பட்டம் பெறும் JKKN ஸ்ரீ சக்திமயில் நர்சிங் கல்லூரி முதல்வர்.

JKKN நர்சிங் கல்லூரி மாணவர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நடந்த உலக சுகாதார தினத்தில் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றனர்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உலக சுகாதார தினம் ஏப்ரல் மாதம் முழுவதும் நடத்தப்பட்டது.

அதில் ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இதர தனியார் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் 'நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வெங்கடேசன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். டாக்டர்.கவிதா உலக சுகாதார தினம் கொண்டாடுவதன் நோக்கம் குறித்த விவரங்களை எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஈரோடு அரசு மருத்துவமனையில் நடந்த உலக சுகாதார தின போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற JKKN நர்சிங் கல்லூரி மாணவ,மாணவிகள்.

மாணவர்களுக்கான கோலப்போட்டி நடந்தது. மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும்,மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகளை நாடக வாயிலாகவும், கை கழுவும் முறையை நடனத்தின் வழியாகவும், தண்ணீரை எவ்வாறு சேமிப்பது என்பதை வில்லுபாட்டின் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதேபோல உலக பூமி தினம், உலக கல்லீரல் தினம் போன்றவையும் நாடகத்தின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் மேற்கொள்ளவேண்டிய சுகாதார முறைகள், மருத்துவமனை சுகாதாரம் போன்ற கருத்துக்களை கூறி மாணவ, மாணவிகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கோலப்போட்டியில் பங்கேற்று பரிசு வென்ற மாணவிகளுக்கு மருத்துவர் கவிதா கேடயம் பரிசாக வழங்கினார். இந்நிகழ்ச்சி அனைத்திலும் JKKN நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை பெற்று முன்னிலை பெற்றனர்.

இதனால் JKKN நர்சிங் கல்லூரிக்கு சாம்பியன்ஷிப் கேடயம் வழங்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் சாம்பியன்ஷிப் கேடயத்தை பெற்றுக் கொண்டு நன்றி கூறினார். நிகழ்ச்சியின் இறுதியாக செவிலியர் ஷகிலா நன்றியுரையாற்றினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!