குமாரபாளையம், JKKN பல் மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா

குமாரபாளையம், JKKN பல் மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா
X
JKKN பல் மருத்துவக்கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது.

JKKN பல் மருத்துவக்கல்லூரயில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.

JKKN பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் நாளை (19ம் தேதி)காலை 10.30 மணிக்கு 30வது பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவிற்கு JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி. செந்தாமரை தலைமை வகிக்கிறார். இயக்குனர் ஓம் சரவணா மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஓம் சரவணா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணைவேந்தர் டாக்டர்.பி.விஜயராகவன், பட்டமளிப்பு விழாவின் முதன்மை விருந்தினராக கலந்துகொள்கிறார். சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவக் கல்லூரி டாக்டர்.எச்.தமிழ்ச்செல்வன், கௌரவ விருந்தினராக கலந்து கொள்கிறார். கல்லூரியின் முதல்வர் டாக்டர்.சிவக்குமார் வரவேற்புரை வழங்குகிறார்.

இவ்விழாவில் பல் மருத்துவக்கல்லூரியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!