Jawaharlal Nehru in Tamil-ஜவஹர்லால் நேருவின் வரலாறு அறிவோம் வாருங்கள்..!

Jawaharlal Nehru in Tamil-ஜவஹர்லால் நேருவின் வரலாறு அறிவோம் வாருங்கள்..!
X

jawaharlal nehru in tamil-ஜவஹர்லால் நேரு 

குழந்தைகளின் செல்ல மாமாவாக விளங்கிய நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Jawaharlal Nehru in Tamil

நேரு நவம்பர் 14, 1889ம் ஆண்டு அலகாபாத்தில் பிறந்தார். இவர் ஒரு குடிமைப்பணியாளராக வரவேண்டும் என்று விரும்பி மோதிலால் நேரு இவரை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார். ஆனால் ஜவகர்லால் நேரு, ஹார்ரோவில் உள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் விரும்பவில்லை.

இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி முடித்துப் பின், ட்ரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார். பின் தந்தையின் அழுத்தத்தின் பேரில், 1910 அக்டோபர் இன்னர் டெம்பில் இல் சட்டம் பயில சேர்ந்தார். 1912இல் வெற்றி பெற்று வழக்குரைஞர் ஆனார். பின் இந்தியாவில் வழக்கறிஞர் பணியாற்றினார்.

Jawaharlal Nehru in Tamil

இவர் இந்திய தேசிய காங்கிரஸின் கொள்கைகள் பிடித்து 1919ல் அதில் இணைந்தார். அதோடு மகாத்மா காந்தியுடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் 1923ல் அனைத்து இந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளரானார். 1929ல் காங்கிரஸின் தலைவரானார். 1930-35ல் காந்தி அவர்கள் முன்னெடுத்து சென்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றார்.

Jawaharlal Nehru in Tamil

குழந்தைகள் மேல் அளப்பரிய பிரியம் கொண்டிருந்ததால், இவரின் பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. வெள்ளையர்களிடமிருந்து விடுதலை அடைந்த பின்னர் ஆகஸ்ட் 15, 1947ல் இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். நேரு தன் ஐந்தாண்டுத் திட்டத்தில் குழந்தைகளுக்குப் பால் மற்றும் மதிய உணவு அளிக்கும் திட்டத்தையும் அமலாக்கினார். கட்டாயத் தொடக்கக் கல்வி தரப்பட உத்தரவாதம் அளித்து ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார்.

Jawaharlal Nehru in Tamil

இவருக்கு கமலா கவுல் என்ற பெண்ணுடன் 17 வயதில் திருமணம் ஆனது. அப்போது கமலாவுக்கு 16 வயது. கமலா நேருவும் சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாகவே ஈடுபட்டார். இவர்களுக்கு இந்திரா பிரியதர்ஷினி என்ற மகள் இருந்தார். பின் நாட்களில் இந்திரா காந்தி என்று அழைக்கப்பட்டார். சத்தியாகிரகம் மற்றும் காங்கிரசால் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு இயக்கங்களில் பங்கேற்றதற்காக 1930 முதல் 1935 அவர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார்.

Jawaharlal Nehru in Tamil

1935, பிப்ரவரி 14ம் தேதி அல்மோரா சிறையில் அவர் தனது சுயசரிதையை எழுதி முடித்தார்.சிறையில் இருந்த நாட்களில், உலக வரலாற்றின் சில காட்சிகள் (1934), தன் சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார்.

Jawaharlal Nehru in Tamil

1964 இல் சீனாவுடனான எல்லைப் பிரச்சினை தொடர்பாக காஷ்மீர் சென்றவர், காஷ்மீரிலிருந்து திரும்பியதும் பக்க வாதத்தாலும், மாரடைப்பாலும் அவதிப்பட்டார். இதன் விளைவாக 1964, மே 27 அன்று காலமானார். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் மே மாதம் 27ம் தேதி அனுசரிக்கப்படுகின்றது.

Tags

Next Story