மாணவர்கள் தனித்திறன் வளர்ப்பதன் அவசியம் என்ன? பெற்றோரும் அறிவது நன்று..!
தனித்திறன் வளர் செயல்பாடுகள்.(கோப்பு படம்)
Importance of Co-Curricular Activities for Students
"அனைத்து பாட வேலைகளையும் முறையாக செய்யும் முகிலன் என்னும் மாணவன்,விளையாடாமல் இருப்பதால் அவனை ஒரு மந்தமான சிறுவனாக ஆக்குகிறது."
அதன் காரணங்கள் என்னவாக இருக்கும்? விரிவாக பார்ப்போமா..?
பல பள்ளிகளின் வகுப்பறைகளைத்தாண்டி விளையாட்டு, இசை, நடனம், ஓவியம், கதை, கவிதைகள் எழுதுவது போன்ற செயலை ஏன் செய்யவேண்டும் என்ற கேள்வி எழுவதில்லை. அல்லது மாணவர்கள் இதை நான் ஏன் செய்யவேண்டும் என்று கேள்விகள் எழுப்புவதில்லை.
மாறாக அவ்வாறான செயல்பாடுகளை நான் செய்யவேண்டும் என்ற வினா மாணவர்கள் மனதில் எழவேண்டும். கேள்வியாக வெளிப்படுத்தாவிட்டாலும் கூட அதை மாணவர்கள் சிந்தித்து இருக்கவேண்டும். இந்த கூடுதல் செயல்கள் ஒரு இணை பாடத்திட்டம் என்று கூறலாம்.
Importance of Co-Curricular Activities for Students
தனித்திறன்
பாடங்களை கற்பது என்பது அடுத்த வகுப்பிற்கான தயாரிப்பு. ஆனால், விளையாட்டு, இசை, நடனம், ஓவியம், கதை, கவிதை எழுதுவது என்பது மாணவர்களின் அறிவை, தனித்திறனை வடிவமைக்கும் கருவிகள். கல்வியைத்தாண்டி சிந்திக்க வைக்கும் ஊடகம். பாடங்களை படிப்பது ஒரு குறிப்பிட்ட வகுப்போடு மறந்துபோகலாம். ஆனால் அறிவும், தனித்திறனும் எல்லா வகுப்பிலும் மாணவர்களோடு பயணிக்கும். அந்த பயணத்தின் வளர்ச்சியில் அறிவு ஞானம் பெறும். ஞானம் என்பது தெளிந்த சிந்தனையை உருவாக்கும் ஒரு தத்துவநிலையாகும். முக்தி நிலை பெற்ற ஒரு முனியின் நிலைபோன்றது. ஆழ்கடலில் அலையற்று இருப்பதுபோல ஒரு ஆழ்ந்த அறிவுடன் இருப்பார்கள்.
அந்த அறிவே வாழ்க்கையை வாழ்க்கையாக வாழக் கற்றுக்கொடுக்கும். தனக்கான வாழ்க்கை எது என்பதை குழப்பமின்றி தீர்மானிக்க உதவும். ஒரு உயர்ந்த வாழ்க்கை வாழ வழிகாட்டியாக இருக்கும்.
இணை பாடத்திட்ட செயல்பாடுகள் என்றால் என்ன?
இணை பாடத்திட்டங்கள் மாணவர்களை வளர்த்தெடுக்கும் கருவி என்றால் அதைப்பற்றிய தெளிவு நமக்கு வேண்டுமல்லவா? அப்படியென்றால் முதலில் அதை அறிந்துகொள்வோம்.
இணை பாடத்திட்ட நடவடிக்கைகள் என்பதன் பொருள் என்ன? இணை பாடத்திட்ட செயல்பாடுகள் என்பது வெறும் ஏட்டுக்கல்வியா மட்டும் கற்றுக்கொள்ளாமல் அதையும் தாண்டி மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் ஆகும். ஆமாம்,பொதுவாக, இணை பாடத்திட்ட செயல்பாடுகள் வகுப்பறைகளுக்கு வெளியே மேற்கொள்ளப்படுகின்றன.
முழுமையான வளர்ச்சி
இந்த செயல்பாடுகள் மாணவர்களுக்கு வகுப்பு பாடத்திட்டத்திற்கு துணையாக இருந்து கற்றலுக்கு உதவுகின்றன. இந்த துணை பாடத்திட்ட செயல்பாடுகள் மாணவர்களுக்கு சிக்கலைத் தீர்த்துக்கொள்ளும் நுண்ணறிவை, பகுத்தறியும் பண்பினை, விமர்சன சிந்தனையை, ஆக்கப்பூர்வ சிந்தையைத் தூண்டவும், தகவல் தொடர்புத் திறனை வளர்க்கவும், குழுவுடன் இணைந்து செயலாற்றும் திறனை, ஒட்டுமொத்தமாக ஒரு ஆளுமைமிக்க திறன்களை வளர்க்க உதவுகிறது.
பகலில் நடக்கும் இசை, கலை அல்லது நாடக வகுப்புகள் போன்ற பள்ளியின் இணை பாடத்திட்ட செயல்பாடுகளில் ஏதாவது ஒன்றில் மாணவர்கள் பங்கேற்பது கட்டாயமாக இருக்கலாம். அதேவேளையில் பள்ளி விளையாட்டுக் குழு, பள்ளி விவாதக் குழுக்கள் அல்லது மாணவர் செய்திமடல், ஆசிரியர் குழுவில் பங்கேற்பது போன்ற பிற நிகழ்வுகளில் தன்னார்வமாக கலந்துகொள்ளும் நெறிமுறையை உருவாக்கலாம். இரண்டிலும் பங்கேற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உணர்திறன் வளர்ச்சி, சமூகத் திறன் மேம்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு உதவுவதாக அமையும். எனவே, இணை பாடத்திட்ட நடவடிக்கைகளின் முக்கியத்துவம் மகத்தானது என்பதை மாணவர்களும் பெற்றோரும் உணரவேண்டும்.
Importance of Co-Curricular Activities for Students
இணை பாடத்திட்ட செயல்பாடுகளின் முக்கியத்துவம்
21ஆம் நூற்றாண்டில் உலகம் வேகமாக மாறி வருகிறது என்பது நாம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது அவசியமில்லை. எனவே, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட மரபுவழிக் கல்விப் பாடத்திட்டம், ஒரு புதிய வகையான கல்விக்கும் கற்றலுக்கும் வழி வகுக்க வேண்டும்.
21st Century Skills: Learning for Life in Our Times என்ற புத்தகத்தில், எழுத்தாளர்கள் பெர்னி ட்ரிலிங் மற்றும் சார்லஸ் ஃபேடல் ஆகியோர், "கடந்த சில தசாப்தங்களில் உலகம் மிகவும் அடிப்படையானதாக மாறிவிட்டது, அன்றாட வாழ்வில் கற்றல் மற்றும் கல்வியின் தரமும் முன்பெப்போதும் இல்லாதவகையில் மாறிவிட்டன” என்கிறார்கள்.
மேலும், ஃபைவ் மைண்ட்ஸ் ஃபார் தி ஃபியூச்சர் என்ற புத்தகத்தில், நூலின் ஆசிரியர் ஹோவர்ட் கார்ட்னர், ஒருவர் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க உதவும் ஐந்து மன திறன்களை கோடிட்டுக் காட்டியுள்ளார். ஹோவர்ட் கார்ட்னரால் எழுதப்பட்ட ஐந்து மன திறன்கள் அல்லது மன நிலைகள் இப்படி குறிப்பிடப்படுகின்றன.
1. ஒழுக்கமான மனம் (பல்வேறு துறைகளில் நிபுணத்துவம்)
2. தி சின்தசைசிங் மைண்ட் (ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு பல்வேறு கோணங்களில் கருத்துகளை ஒருங்கிணைக்கும் திறன்)
3. தி கிரியேட்டிங் மைண்ட் ( ஆக்கப்பூர்வமாக சிந்தித்து சிக்கல்களை தீர்க்கும் திறன்)
4. மரியாதைக்குரிய மனம் (தனி நபர்களின் பன்முகத்தன்மையைப் பாராட்டுதல்)
5. நெறிமுறை மனம் (ஒரு குடிமகனாக சமூகத்தில் ஒருவரின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை உணர்ந்து நிறைவேற்றுதல்).
நான்கு சுவர்களைத் தாண்டிய செயல்பாடு
21ஆம் நூற்றாண்டில் கல்வியும் கற்றலும் என்பது ஒரு வகுப்பறையின் நான்கு சுவர்களைக் கடந்து செல்ல வேண்டும் என்பதையே மேற்கூறப்பட்டுள்ளக் கருத்துக்கள் வலியுறுத்துகின்றன. எனவே, கல்வி மற்றும் கற்றலின் முக்கிய நோக்கம் ஒரு மாணவனை முழுமை பெற்ற அறிவுள்ளராக வளர்த்தெடுப்பதாக இருக்க வேண்டும். இதில் முழுமைபெற்ற வளர்ச்சி என்பதில் இணை பாடத்திட்ட நடவடிக்கைகளின் பங்கு மிக அடிப்படையானது என்பதை நாம் புறக்கணித்துவிட முடியாது.
ஆகவே, முழுமையான வளர்ச்சி என்பது அறிவு, உடல், உணர்ச்சி மற்றும் சமூகம் சார்ந்த வளர்ச்சியைக் குறிக்கிறது. இது முறையான கல்வியின் மூலம் மட்டுமே அடைய முடியும். எனவே, முழுமையான வளர்ச்சியில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.
இணை பாடத்திட்ட செயல்பாடுகள் மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்த உதவுவதோடு, இந்த நூற்றாண்டின் வாழ்க்கை நிலைகளுக்கு ஏற்ப, பணியிடங்களில் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, அடிப்படைத் திறன்கள் மற்றும் தனித்திறன்களை வளர்க்க உதவுகின்றன. எனவே, பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியின் போது இணை பாடத்திட்ட செயல்பாடுகளின் முக்கியத்துவம் மகத்தானது என்பதை மறவாதீர்.
12 வகையான இணை பாடத்திட்ட செயல்பாடுகள் மூலம் மாணவர்கள் உருவாக்கிக் கொள்ளவேண்டிய அத்தியாவசிய திறன்கள் மற்றும் அதன் மதிப்பீடுகள்
மாணவர்களின் நெறிமுறை பாடத்திட்டம் மற்றும் இணை பாடத்திட்ட செயல்பாடுகள் ஆகிய இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டால் மட்டுமே அதன் பலம், ஆர்வம் மற்றும் திறன்களை மேலும் கற்கவும், ஆராய்வதற்கான வாய்ப்பையும் அதிகப்படுத்தும்.நெறிமுறை பாடத்திட்டத்திற்கு துணையாக இருக்கும் இணை பாடத்திட்ட செயல்பாடுகளின் முக்கியத்துவம் கீழே தரப்பட்டுள்ளது.
மாணவர்களின் அறிவுசார் வளர்ச்சியின் பெரும்பகுதி வகுப்பறையிலேயே நிகழ்கிறது என்பது உண்மைதான். ஆனால், உங்கள் ஆளுமையின் பல்வேறு அம்சங்கள், உணர்திறன் மற்றும் சமூக திறன் மேம்பாடு போன்றவை, இணை பாடத்திட்ட செயல்பாடுகள் மூலம் மிகப்பெரிய அளவில் நிகழ்கின்றன. எனவே, முழுமையான வளர்ச்சி என்பது இணை பாடத்திட்ட நடவடிக்கைகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பதை மறுத்துவிட முடியாது.
Importance of Co-Curricular Activities for Students
இணை பாடத்திட்ட செயல்பாடுகள் மூலம் மாணவர்கள் உருவாக்கவேண்டிய அத்தியாவசிய திறன்கள் மற்றும் மதிப்பீடுகள்
1. தர்க்கரீதியான மற்றும் பகுப்பாய்வு சிந்தனை - நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை பகுப்பாய்வு செய்தல்
2. விமர்சன சிந்தனை - இது கருத்துக்கள், யோசனைகள் மற்றும் சிக்கல்கள் மற்றும் சிக்கல்களை கூர்ந்து நோக்க வைக்கிறது.
3. கிரியேட்டிவ் சிந்தனை - வேறு வார்த்தைகளில் இதை கூறுவதானால், சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புதிய வழிகளைப் பற்றி சிந்திப்பது, காட்சிப்படுத்துவது, புதிய யோசனைகளை முன்மொழிவது
4. சிக்கலைத் தீர்க்கும் திறன் - எடுத்துக்காட்டாக, பல்வேறு கருத்துகள், தீர்வுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறைகளைக் காண்பது.
5.தலைமைத்துவ திறன்கள் - உதாரணமாக, முன்முயற்சிகள் மற்றும் பொறுப்புகளை முன்வந்து எடுத்துக்கொள்வது, ஒரு நல்ல நோக்கத்திற்காக மற்றவர்களை பணிகளில் ஈடுபடுத்துதல், இலக்கு நிர்ணயித்தல், இலக்குகளை நோக்கிச் செயல்பட மற்றவர்களைத் தூண்டுதல், பொறுப்புகளை எடுத்துக்கொள்வது
6. சமூக திறன்கள் - ஒத்துழைப்பை உள்ளடக்கியது; குழுவாக இணைந்து பனி செய்வது, மற்றவர்களுடன் நல்ல உறவுகளை உருவாக்குதல்
7. உணர்வுத் திறன்கள் - பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்வது, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பிறரிடம் பச்சாதாபம் காட்டுதல்
8. தொடர்புத் திறன் - வெளிப்படுத்தும் ஆற்றல், பிறரின் ஆலோசனைக் கேட்பது, பொதுவான பேச்சுத் திறன் போன்றவற்றை உள்ளடக்கியது.
9. தொழில்நுட்பத் திறன்கள் - பல்வேறு கணினி மென்பொருள்கள் மற்றும் பயன்பாடுகளைப் பயன்படுத்தி பணிகளை செய்யும் திறன்
10. சமூக மதிப்புகள் - இதை வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால் , தனிநபர்களின் குணங்களை மதிப்பது, வேறுபாடுகளை மறப்பது, மற்றவர்களின் மீது மதிப்பும் மரியாதையும் வைப்பது, கலாச்சாரத்தை மதிப்பது
11. நெறிமுறைகளை மதிப்பது - உதாரணமாக, பொது வாழ்க்கையில் நெறிமுறைகளைப் பேணுதல், நல்ல தார்மீக மதிப்புகள் போன்றவை.
12. பொழுதுபோக்கு மதிப்புகள் - ஓய்வு மற்றும் பொழுதுபோக்கின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது, ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பங்கேற்பது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu