படிச்ச உடனே வேலை..! நர்சிங் படிங்க..! (மாணவர்களுக்கு வழிகாட்டும் தொடர்)
நர்சிங் மாணவிகள் (மாதிரி படம்)
நர்ஸ் வேலை எல்லாராலும் செய்துவிட முடியாது. கனிவு, அன்பு, தியாக மனப்பான்மை இருந்தால் மட்டுமே செவிலியராக வேலை செய்யமுடியும். மருத்துவத்துறையில் கொஞ்சம் ஆர்வம் இருப்பது சிறப்பு. படித்தவுடன் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், தயக்கமே இல்லாமல் நர்சிங் டிகிரி படிக்கலாம்.
இதில் பி.எஸ்சி.,(B.Sc.,).நர்சிங் 4 வருட பட்ட படிப்பாகும். உயர்கல்வி சிந்தனை உடையவர்கள் மற்றும் உயர் பதவிக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் எம்.எஸ்சி., (M.Sc.,)நர்சிங் படிக்கலாம். எம்.எஸ்சி.,(M.Sc.,) 2 ஆண்டு படிப்பாகும்.
காலமாற்றத்தில் மருத்துவம், இன்றியமையாத துறையாக மாறிவிட்டது. மருத்துவம் இல்லாத மனிதன் இல்லை என்ற சூழலுக்கு உலகம் தள்ளப்பட்டுள்ளது. அதனால், மருத்துவத்துறையில் எல்லா காலகட்டத்திலும் வேலைவாய்ப்பின் கதவுகள் திறந்தே இருக்கும். இதேபோல டிப்ளமோ நர்சிங் படிப்புகளும் உள்ளன. அரசு அங்கீகாரம் பெற்ற நர்சிங் பட்டய படிப்புகளை படிக்கலாம். அந்த படிப்புகளுக்கும் தனியார் மருத்துவமனைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் மருத்துவதுறை பிரம்மிக்கத்தகுந்த வகையில் வளர்ந்துள்ளது. மருத்துவத்திற்காக தேவைகளும் அதிகரித்து வருகிறது. அதனால், உடனடி வேலைவாய்ப்புக்கு சிறந்த படிப்பு நர்சிங் ஆகும்.
குமாரபாளையம், ஜே.கே.கே.நடராஜா, ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரியில் திறமையான ஆசிரியர்களைக்கொண்டு மிகச் சிறந்த நர்சிங் கல்வி வழங்கப்படுகிறது. ஜே.கே.கே.நடராஜா மருத்துவக்கல்லூரிக்கென தனி மருத்துவமனை இருப்பதால் நர்சிங் படிக்கும் மாணவர்கள் சிறந்த பயிற்சி பெற வழிவகை கிடைக்கிறது. ஜே.கே.கே.நடராஜா, ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரியில் நர்சிங் பட்டம் பெற்று, திறமைமிகு செவிலியராக உலகெங்கும் பல நாடுகளில் பணிசெய்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu