IES Examination in India-IAS -க்கு இணையான IES தேர்வு..! அறிவோம் வாருங்கள்..!

IES Examination in India-IAS -க்கு இணையான IES தேர்வு..! அறிவோம் வாருங்கள்..!
X

IES Examination in India-ஐஇஎஸ் தேர்வு (கோப்பு படம்)

IES தேர்வினை 4 Engineering குரூப் மாணவர்கள் மட்டும்தான் எழுதவே முடியும்.

IES Examination in India, Educational News, Engineerin Students, Civil Engineering, Mechanical Engineering, Electrical and Electronics Engineering, Electronic and Communication Engineering

தமிழகத்தில் பொறியியல் மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஐ.இ.எஸ் தேர்வு பற்றியும், அதற்கு என்ன branch படிக்க வேண்டும் என்பது பற்றியும் இப்போது பார்ப்போம்.

அகில இந்திய குடிமைப் பணிகள் போலவே, அகில இந்திய பொறியியல் பணிகள் உள்ளன. அதாவது ஐ.ஏ.எஸ் போல் ஐ.இ.எஸ் பணிகள் உண்டு. IES - Indian Engineering Services. ஐ.இ.எஸ் என்பது நாட்டின் உயரிய பொறியியல் சார்ந்த பணியாகும். இதற்கான தேர்வு சிவில் சர்வீஸ் தேர்வுகளைப் போன்றே கடினமானது. இந்த தேர்வை யூ.பி.எஸ்.சி தான் நடத்துகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்வை என்ஜினீயரிங் படிப்புகளில் நூற்றுக்கு மேலான பாடப்பிரிவுகள் இருந்தாலும், 4 பாடப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எழுத முடியும்.

இந்தநிலையில், ஐ.இ.எஸ் தேர்வு மற்றும் அதற்கான பொறியியல் பாடப்பிரிவுகள் குறித்து கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். கம்ப்யூட்டர் சயின்ஸ் எதிர்காலத்திற்கு தேவையான படிப்பு தான். ஆனால் இத்தனை பேர் படிக்க வேண்டுமா என்பது தான் கேள்விக்குறி.

IES Examination in India

எலன் மஸ்க் உள்ளிட்ட பெரு நிறுவனத் தலைவர்கள் உங்கள் துறையில் ஆட்டோமேஷன் சார்ந்து படியுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள். இதேநிலை நீடித்தால், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பவர்கள், ஆட்டோமேஷன், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பாடங்களை படிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

என்ஜினீயரிங் படித்தவர்கள் மட்டுமே எழுதக்கூடிய ஐ.இ.எஸ் தேர்வு உள்ளது. இதற்கான தேர்வை யூ.பி.எஸ்.சி தான் நடத்துகிறது. இந்தியாவிலே என்ஜினீயர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் பதவி இது தான். இதற்கு கீழ்கண்ட 4 பொறியியல் பாடப்பிரிவை படித்தவர்கள் மட்டுமே தகுதி பெறுவர்.

Civil Engineering

Mechanical engineering

Electrical and electronics Engineering

Electronic and communication engineering

இது தவிர பிற பாடப்பிரிவை படித்தவர்கள் எழுத முடியாது. குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் எழுத முடியாது. கோர் டிபார்ட்மெண்ட்களில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. எனவே நல்ல கல்லூரிகளில் இதுபோன்ற கோர் படிப்புகளை தேர்வு செய்யுங்கள்.

ஐ.இ.எஸ் தேர்வு செயல்முறை

முதல் நிலை தேர்வு - 500 மதிப்பெண்கள்

முதன்மை தேர்வு - 600 மதிப்பெண்கள்

நேர்முகத் தேர்வு - 200 மதிப்பெண்கள்

முதல்நிலைத் தேர்வில் ஜெனரல் ஸ்டெடிஸ் என்ஜினீயரிங் ஆப்டிடியூட் மற்றும் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் இருந்து வினாக்கள் இடம்பெறும். முதன்மைத் தேர்வில் பொறியியல் படிப்புகளில் இருந்து விரிவான விடையளிக்கும் வகையில் வினாக்கள் இடம்பெறும்.

IES Examination in India

ஐ.இ.எஸ் தேர்வில் தேர்வாகுபவர்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகள் வழங்கப்படும். எனவே மாணவர்கள் கோர் படிப்புகளுக்கு கவனம் கொடுங்கள்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜூம் கம்ப்யூட்டர் சயின்ஸ் தவிர கோர் படிப்புகளில் கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளார். மேலும் நல்ல கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!