JKKN நர்சிங் கல்லூரியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
சிறப்பு விருந்தினர் கௌரவிக்கப்பட்டபோது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், JKKN ஸ்ரீ சக்திமயில் நர்சிங் கல்லூரியில் நடந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டம் பிரார்த்தனை பாடலுடன் துவங்கியது. இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் டாக்டர்.ஜமுனாராணி வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை, ஆசிரியை சிவகாமி கலந்துகொண்டார்.
அவர் பேசும்போது, 'நமது நாட்டின் பல்வேறு கலாசார கொண்டாட்டங்களின் சிறப்புகள் நம் நாட்டின் தனித்தன்மையை உலகுக்கு காட்டும் கண்ணாடியாக விளங்கும். ஒரு நாட்டின் கலாசார பழக்கவழக்கங்களே அந்த நாட்டின் பெருமைகளை விளக்குவதாக அமையும். அந்த பண்பாட்டு கலாசார அடிப்படையிலேயே நமது இலக்கியங்களும் படைக்கப்பட்டுள்ளன.
ஒரு மாநிலத்தின் கலாசார பகிர்வு மாநிலங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும். இது நாட்டின் ஒற்றுமைக்கு அவசியமும் கூட. ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் விழாவாக மாறிவிட்டது. இதுகூட புதிய கலாசாரத்தின் தொடக்கம் என்று கூட சொல்லலாம்.
எதிர்காலத்தில் நீங்கள் உங்களின் செவிலியர் பணிகளுக்காக வேறு மாநிலங்களில் கூட பணிகளைமேற்கொள்ளும் சூழல் வரலாம். அப்போது அந்த மாநிலத்தின் பழக்கவழக்கங்கள், உணவு முறைகள் போன்றவை உங்களுக்கு பரிட்சயமாகி இருந்தால் அவர்களுடன் இணக்கமாக வாழ்வதில் சிரமம் இருக்காது' என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சி நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் மூலமாக மாணவர்கள் நாட்டின் பல்வேறு கலாசார முறைகளை அறிந்துகொண்டதுடன் ஒவ்வொரு மாணவருக்குமான தனித்தன்மையை வளர்த்துக்கொள்ளும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாகவும் இருந்தது. இது எதிர்கால செவிலியர் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அவர்களின் திறன்களையும் அறிவையும் வளர்த்துக் கொள்ள இதைப்போன்ற நிகழ்ச்சிகள் ஒரு உந்துசக்தியாக அமையும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu