JKKN கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தினத்தையொட்டி பவானியில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

JKKN கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தினத்தையொட்டி பவானியில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
X

JKKN மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா மற்றும் பவானி நகராட்சித் தலைவர் சிந்தூரி இளங்கோவன் ஆகியோர்.

உடல் மற்றும் மன நலன் ஆரோக்கிய வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி பவானியில் நேற்று நடைபெற்றது.

உடல் மற்றும் மன நலன் ஆரோக்கிய வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, பவானி சங்கமேஸ்வரர் கோவில் முன்பாகத் தொடங்கியது. இப்பேரணிக்கு JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா ஆகியோர் தலைமை தாங்கினர்.

பவானி நகராட்சித் தலைவர் சிந்தூரி இளங்கோவன் பேரணியை கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை விளக்கும் வகையில் நடைபெற்ற இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்றது.


JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனரின் 97-வது நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணியில் மாணவ, மாணவியர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். உடல் மற்றும் மன நலன், ஆரோக்கிய வாழ்வின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது. அவ்வாறு நடந்த சைக்கிள் பேரணியில் காப்போம், காப்போம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை காப்போம், ஆரோக்கியத்திற்கு உணவே மருந்து, இயற்கை விவசாயம் பழகுவோம், காய்கறிகளை உண்போம், ரசாயன பயன்பாட்டை தவிர்ப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இயற்கையான உலகத்தை மீட்டெடுப்பது தற்போது மிக அவசியமானதாகவும் அவசரமானதாகவும் உள்ளது. குறிப்பாக பள்ளி,கல்லூரி மாணவர்களிடம் இயற்கை குறித்த விழிப்புணர்வை கொண்டுசெல்வது அவசியம் ஆகும்.

தொழிற்சாலைகளின் புகை, வாகனங்கள் வெளியிடும் கார்பன் மோனாக்சைட், நீர்நிலைகளில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகள், மரங்களை வெட்டுதல், சுறுப்புற சூழலால் பாதிக்கப்படும் உயிரினங்கள், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயண உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் மண்ணை மலடாக்கிவிட்டது. ஆகவே, நாம் இழந்த இயற்கையை மீது ஒரு சிறந்த எதிர்கால உலகினை எதிர்கால சந்ததிகளுக்கு கொடுக்கவேண்டும். ஆகவே, அந்த பொறுப்பை மாணவர்கள் உணரவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு JKKN கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடத்தப்பட்டதே இந்த உடல் மற்றும் மன நலன் ஆரோக்கிய வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.


இந்த பூமியை இழந்துவிட்டு மனிதர்கள் உயிர்வாழ முடியுமா? இன்று பல உலகத் தலைவர்கள் பூமியை காப்பாற்றவேண்டும் என்று குரல்கொடுக்கத்தொடங்கிவிட்டனர்.இந்தியா உட்பட பல நாடுகள் பசுமைத் தயாரிப்புக்களில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டன. பிரதமர் மோடி வாகனங்களில் மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றார். 2030ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடே முழுமையாக இருக்கவேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறார்.

அதற்காகவே சுற்றுச் சூழலை மேம்படுத்தும் வகையில் சுற்றுச் சூழல் ஆர்வலர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தும் வருகிறார். தமிழக அரசும் சுற்றுச் சூழலை காப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காகவே தமிழக அரசும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்