JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரியில் வெபினார் கருத்தரங்கம்
guest lecture online seminar on abroad jobs-ஆன்லைன் கருத்தரங்கம்.
குமாரபாளையம், JKKN ஸ்ரீசக்திமயில் செவிலியர் கல்லூரியில் வெபினார் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர்.ஜமுனாராணி, சிறப்பு பேச்சாளரை அறிமுகம் செய்து வெபினார் கருத்தரங்கம் குறித்தும் விளக்கினார்.
இந்த ஆன்லைன் வெபினார் கருத்தரங்கில் சிறப்பு பேச்சாளராக நியூசிலாந்து ஹில்மார்டன் மருத்துவமனை தீவிர உள்நோயாளிகள் பிரிவு இன்சார்ஜ் பிரிவில் பணியாற்றும் நிசான் முகமது ஷாஜகான் கலந்து கொண்டு நியூசிலாந்தில் நர்சிங் வேலையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் பேசினார். இந்த வெபினார் கருத்தரங்கு மூலமாக மாணவ, மாணவிகளுக்கு விரிவான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கினார்.
மேலும் நியூசிலாந்தில் பணியாற்ற விருப்பப்படும் செவிலியர்கள் கட்டாயம் IELTS / OET தேர்வு எழுதி இருக்க வேண்டும். அதில் 10 மதிப்பெண்களுக்கு குறைந்தபட்சம் 7 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அவர்கள் மட்டுமே நியூசிலாந்தில் செவிலியர் பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.65,000 முதல் ரூ.1,50,000 வரை ஊதியமாக பெறலாம் என்றும் மாணவ,மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கும்விதமாக அந்நாட்டில் வேலைக்குச் சேர்வதில் உள்ள அடிப்படை விதிமுறைகளை கூறியதுடன் தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
பின்னர் கருத்து விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இதில் பங்கேற்றவர்களுக்கு E- சான்றிழ் வழங்கப்பட்டது. இந்த வெபினாரில் சுமார் 150 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu