பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு - ஆகஸ்ட் 15 ல் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு - ஆகஸ்ட் 15 ல் அறிவிப்பு வெளியாகும் என தகவல்
X

பள்ளி மாணவிகள் (பைல் படம்)

பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பு.

பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு.ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் திட்டம். ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பு.

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் ஆன்லைனில் மட்டுமே மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து விரைவில் பள்ளிகள் திறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கருதப்பட்டது.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சுதந்திரதின உரையாற்றும்போது பள்ளிகள் கல்லூரிகள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டு பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

Tags

Next Story