குமாரபாளையம், JKKN கல்லூரியில் 'கூகுள் கேரியர் சர்டிபிகேட்' வழங்க ஏற்பாடு

குமாரபாளையம், JKKN கல்லூரியில் கூகுள் கேரியர் சர்டிபிகேட் வழங்க ஏற்பாடு
X
JKKN கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் 'கூகுள் கேரியர் சர்டிபிகேட்' கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூகுள் கேரியர் சர்டிபிகேட் ஸ்காலர்ஷிப் திட்டம் என்பது, தேவைக்கேற்ற தொழில்துறை திறன்களை மேம்படுத்துவது மட்டுமல்ல, சரியான உண்மைச் சான்றிதழைப் பெறுவதும் ஆகும்.

அந்த சான்று நிறுவனங்களில் பணி வாய்ப்பை பெறுவதை உறுதிப்படுத்துகிறது. JKKN கல்வி நிறுவனங்கள், NASSCOM அறக்கட்டளை மற்றும் ஆஸ்பயர் ஃபார் ஹெர் ( Aspire For Her )உடன் இணைந்து கூகுள் வடிவமைத்த தொழில்முறை பயிற்சியை JKKN மாணவர்கள் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.

அதன்படி JKKN கல்வி நிறுவனங்கள், NASSCOM அறக்கட்டளை மற்றும் Aspire For Her உடன் இணைந்து வரும் மே 17ம் தேதி அன்று ஜூம் மீட்டிங் மூலம் கூகுள் நிபுணத்துவ(scholarship) சான்றிதழ் பெறுவதற்கான நோக்குநிலை நிகழ்ச்சியை (orientation programme) ஏற்பாடு செய்துள்ளது. இந்த சான்றிதழ் JKKN கல்வி நிறுவன மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க வழிவகை செய்யும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!