JKKN மருந்தியல் கல்லூரி சார்பில் இலவச உடல் மற்றும் பல் பரிசோதனை முகாம்
நாட்டுநலப்பணித்திட்ட முகாமில் நடந்த மருத்துவ முகாம்.
தமிழ்நாடு டாக்டர் MGR மருத்துவப்பல்கலைக்கழகம் மற்றும் JKKN மருந்தியல் கல்லூரி இணைந்து நாட்டு நலப்பணித்திட்ட (N.S.S) சிறப்பு முகாம் 16ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை தட்டாங்குட்டை கிராமத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அதையொட்டி 16ம் தேதி, அன்று தட்டாங்குட்டை கிராமத்தில், இலவச உடல் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
இந்த முகாமில் கல்லூரியின் மருந்தியல் மாணவ, மாணவிகள் முகாமிற்கு வந்தவர்களை அன்புடனும், கனிவுடனும் வரவேற்று அவர்களின் உயரம், எடை, உடல் நிறை குறியீட்டெண், இரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் உள்ளடக்கம், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு ஆகியவற்றை கணக்கிட்டனர்.
மேலும் நோய்த்தன்மை குறித்த அறிக்கையின் அடிப்படையில், உடல் பருமன், இரத்த சோகை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்புகள் தொடர்பான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கினர். நோய்கள் குறித்த விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டன.
இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் 40 மருந்தியல் பயிலும் மாணவர்கள் தன்னார்வலர்களாக பங்கு கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. முகாமினை ஜே.கே.கே.நடராஜா கல்லூரியின் முதல்வர் முனைவர் சம்பத்குமார், தட்டாங்குட்டை கிராமத்தலைவர் புஷ்பா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
17ம் தேதி, அன்று தட்டாங்குட்டை கிராமத்தில், முனைவர் விஜயபாஸ்கரன் மற்றும் முனைவர் சேகர் ஆகிய பேராசிரியர்கள் தலைமையில் கோவிட்-19 தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
18ம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று தட்டாங்குட்டை கிராமத்தில், இலவச பல் பரிசோதனை முகாம் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பல் பரிசோதனை செய்து பயனடைந்தனர். மேலும், அனைத்து முகாம்களிலும்,"தூய்மை இந்தியா திட்ட" நலப்பணிகள் (Swachh Bharat) தட்டாங்குட்டை கிராமத்தின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu