JKKN பல் மருத்துவக்கல்லூரியின் 'நடமாடும் இலவச பல் மருத்துவமனை' துவக்க விழா..!
நடமாடும் மருத்துவ வாகனத்தை திறந்துவைக்கும் JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை.
குமாரபாளையம், JKKN பல் மருத்துவக்கல்லூரி & மருத்துவமனை, மற்றும் கல்லூரியின் சமூக நல பல் மருத்துவத்துறை இணைந்து நடமாடும் இலவச பல் மருத்துவமனை வாகனம் இன்று (24ம் தேதி) காலை 9 மணி அளவில் கல்வி நிறுவன வளாகத்தில் இனிதே துவக்கிவைக்கப்பட்டது.
இத்துவக்க விழாவில் நடமாடும் இலவச மருத்துவமனை வாகனத்தை JKKN கல்வி நிறுவனத் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை துவக்கி வைத்தார். இயக்குனர் .ஓம்சரவணா விழாவிற்கு முன்னிலை வகித்தார். பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் இளஞ்செழியன் உடன் இருந்தார்.
இந்த நடமாடும் இலவச பல் மருத்துவமனை வாகனத்தில் சிகிச்சை அளிக்க வசதியாக கம்ப்ரசர் பொருத்தப்பட்ட இரண்டு பல் மருத்துவ நாற்காலிகள், கையடக்கமான எக்ஸ்ரே மெஷின் மற்றும் அனைத்து விதமான பல் மருத்துவ உபகரணங்கள் உள்ளன. யு.பி.ஸ் மற்றும் ஜெனரேட்டர் ஆகிய இரண்டிலும் இயங்கும் வகையில் இந்த பல்மருத்துவ வாகனமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச நடமாடும் பல் மருத்துவ வாகனத்தின் மூலம் பொது மக்களின் இருப்பிடத்திற்கே சென்று பல் பரிசோதனை முகாம் நடத்தி அங்குள்ள பொது மக்களுக்கு பல் சொத்தை, பல் கூச்சம், ஈறுகளில் இரத்தக்கசிவு, ஈறு சிதைவு நோய், வாய் துர்நாற்றம், உடைந்த பற்கள், ஆறாத வாய்ப்புண்கள் போன்ற அனைத்திற்கும் இலவச பல் சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியில் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu